இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 அக்டோபர், 2015

கடவுளே உனக்கு வேண்டும் ...!!!

கடவுளே உனக்கு வேண்டும் ...!!!
நாஸ்தீகன் என்று கூறி ....
உன்னை கல் என்கிறார்கள் ....
உன்னில் ஒன்றும் இல்லை என்கிறார்கள் ...
சில நேரம் உன்னையே திருடுகிறார்கள் ...

ஆஸ்தீகனை படைத்தாய் ..!!!
ஆடம்பர வீடு உனக்கு கட்டுகிறார்கள் ...
அழகான பந்தல் போடுகிறார்கள் ..
படைத்தவனுக்கே படையல் போடுகிறார்கள் ..
தங்கநகை போடுகிறார்கள் ...
உலகத்தையே சுமக்கும் உன்னை ..
சுமந்து பெருமை பேசுகிறார்கள் ..

என்னை
பொறுத்தவரை -இந்த இருவரும்
பாவிகள்தான் .........!!!
கடவுளே உனக்கு வேண்டும் ..
இவர்களை பாவி என்று சொன்ன என்னை
படைத்ததற்கு ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக