இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஆன்மீக கவிதை 02

அரியும் சிவனும் சேர்ந்து ......
அரிசியானவனே .........
உடலும் உயிரும் சேர்ந்து .....
ஆலயமானவனே ........
உணர்வும் செயலும் சேர்ந்து ......
மறை பொருளானவனே ......
என்னுள் இருப்பவனே .....
எல்லாம் வல்லவனே ........!!!

உன்னை வணங்காத மனம் ......
வேண்டாம் ........
உன்னை நினைக்காத இதயம் .....
வேண்டவே வேண்டாம் .......
உன்னை சொல்லாத சொற்கள் .....
வேண்டாம் ...........!!!

நீ ஒளி வடிவானவனா ......?
நீ ஒலி வடிவானவனா ......?
நீ தீ வடிவானவனா ...........?
நீ காற்று வடிவானவனா ....?
நீ திண்மவடிவானவனா....?
நீ திரவ வடிவானவனா ......?

உன் .....
வடிவை மாயக்கண்ணால் .....
பார்க்கவே முடியாது .......
மனக்கண்ணால் தான் ......
பார்க்கமுடியும் ....................
மனக்கண்ணால் பார்க்கும் .......
மார்க்கங்களை தந்து விடு ........!!!

&
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக