இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 ஆகஸ்ட், 2013

பரிதாப நிலை இது ....!!!

வெட்டப்பட்ட மரத்தின் மத்தியில் 
நிற்கும் வெட்டப்படாத மரத்தின் 
பரிதாப நிலை  இது ....!!!

அடுத்த மரணதண்டனை 
தனக்கு தான் என்று தெரிந்த 
தூக்கு தண்டனை கைதிபோல் 
துடித்துக்கொண்டு இருக்கிறது 
வெட்டுப்படாத மரம்...!!!

காற்றடிக்கிறது 
மரம் அசையாமல் இருக்கிறது 
சாகப்போகிறவனுக்கு 
தென்றலென்ன புயலென்ன ...?
காற்றடிக்க அசைந்து கவர்ச்சி காட்ட ...!!!

அந்தோ ஒரு வாகன இரைச்சல் 
இன்று எனக்கு மரணதண்டனையோ 
கருணைமனுக்கூட கொடுக்க முடியாத 
கொடும் பாவியாகி விட்டேனே ...?
நான் விட்டதவறு 
வெட்ட வருபவனுக்கு மூச்சுவிட 
காற்று  கொடுத்ததுதான் ....!!!