இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

காதல் தெய்வம் தான்...?

ஒரு நிமிடத்தில் 
எழுபத்திரண்டு தடவை 
துடித்த இதயம் ...!!!

உன்னை கண்டால் 
கூடுகிறது துடிப்பு ...!!!

உன்னை 
காணவில்லையென்றால் 
குறைகிறது துடிப்பு ...!!!

இதற்கு வைத்தியம் 
இல்லையென்று வைத்தியர்கள் 
கைவிரித்து விட்டார்கள் ...!!!

கடைசியாக சொன்னார்கள் 
ஒரு வார்த்தை உன்னை 
காதல் தெய்வம் தான் 
காப்பாற்ற வேண்டுமென்று ...!!!