இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஒரு கதை ஒரு குறள் ஒரு ஹைகூ

ஒரு கதை 
***************
அந்த ஊரில் காமாட்சியும் விசாலாட்சியும் கல்லூரி 
கால நண்பர்கள் இப்போ திருமணமாகி ஒரே ஊரில் 
வாழ்ந்து வருகின்றனர்....

காமாட்சி நல்ல வசதியான குடும்பத்தில் திருமணமானவள். விசாலாட்சி நடுத்தர வாழ்க்கை 

ஆனால் காமாட்சி வீட்டில் ஆடம்பர செலவு அதிகம் 
அதனால் வீட்டில் ஒரே சாச்சரவுதான் வீட்டில் நிம்மதி தான் இல்லை அதை காசுகொடுத்து வாங்க முடியாதே ...!

விசாலாட்சி வீட்டில் தனது கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து சந்தோசமாக 
வாழ்ந்து வருகிறாள் ....!!! இவளது சந்தோசத்தை 
பார்த்து சில வேளையில் காமாச்சி பொறாமை 
பட்டதுமுண்டு ......!!!

ஒரு குறள்
****************
குறள் 51: 
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

ஒரு ஹைக்கூ 
*****************

வருவாய்க்கு செலவு 
வளமான வாழ்க்கை 
அழகான துணைவி