இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 15 ஆகஸ்ட், 2013

நம்மில் இருக்கும் அன்னியர்கள் ....!!!

நீ உனக்காக வாங்கிய 
அடியைவிட சிறுவயதில் 
எனக்காக வாங்கிய அடி அதிகம் 
என் உடன் பிறப்பு கூட 
உன்னைப்போல் என்னை 
காப்பற்றியது இன்றுவரையில்லை ...!!!

நான் செய்யும் தவறுக்கு 
தலையாட்டமாட்டாய் ...!!!
நான் செய்யாத குற்றத்தை 
தாங்கிக்கொள்ளமாட்டாய் 
நட்பு என்றால் -தீமைக்கு 
துணைபோகக்கூடாது 
நன்மைக்கு துணைபோகாமல் 
இருக்கவும் கூடாது 
என்பதை உணரவைத்தவன் ...!!!

எதுவென்றாலும் அவனுக்கு 
நடக்கட்டும் என்பவன் 
நம்மில் இருக்கும் அன்னியர்கள் ....!!!

எதுவுமே அவனுக்கு நடந்துவிட கூடாது 
என்று நினைப்பவன் -நண்பன் ....!!!