இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 13 மார்ச், 2016

இனியவன் - பழமொன்ரியு

ஐம்பதில் வளையாது
ஐம்பதிலும் வளைந்திருகிறது
முதுகு

@
பொய் சொன்னால் பொரிகிடைக்காது
பொய் சொல்லியே மாளிகை கட்டினார்
அரசியல் வாதி

@

பாத்திரம் அறிந்து பிச்சை போடு
பிச்சைகாரன் கையில் செல்லிடப்பேசி
தருமம் தோற்றது

@

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான்
குடிகாரன்

@

ஆழம் அறியாமல் காலை விடாதே
அண்டம் அழிந்தாலும் ஆழம் தெரியாது
காதல்

@

ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்கும் காலம் வரும்
காலம் மாறிக்கொண்டே போகிறது ஆட்சி மாறவில்லை
குடும்ப ஆட்சி

@

இட்டு கெட்டார் எவருமில்லை
அன்னதானமடம் மூடப்பட்டுள்ளது
நிதி மோசடி

@

உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது
பள்ளி செல்லாமலே நாட்டை ஆழுகிறார்
அரசியல் வாதி

@

கடுகு சிறிதாயினும் காரம் பெரிது
அணுவாயுதத்தால் உலகை ஆள்கிறது
வல்லரசுகள்

@

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
இன மத கலவரம்
சாதிக்கட்சிகள் சந்தோசம்

@
கவிப்புயல் இனியவன்
பழமொன்ரியு 10

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக