இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 12 மார்ச், 2016

நினைத்தால் மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
--------

பச்சை நிற உடலழகியின்...
வண்ண வண்ண பூக்கள் ....
அங்காங்கே அழகுபடுத்தும் ....
பச்சை நிற அழகியின் வதனம் ....
சுற்றும் முற்றும் பார்த்தேன் ...
தூரத்தில் யாரும் இல்லை ...
தடுப்பாரும் யாருமில்லை ....!!!

கிள்ளி எடுத்தேன் பூவை ....
தள்ளி போகமுடியாமல் ..
தன் வதனத்தை இழந்து ...
தவிர்த்த செடியின் சோகத்தை ...
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

ஆற்றங்கரைக்கு போனேன் .....
அழகான ஆற்று நீரில் கால் ....
பதித்தேன் தட்டி சென்றது மீன் ...
கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு ....
ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!!

என்னை மறந்தேன் -தூண்டிலில் ...
புழுவை செருகி  துடிக்க துடிக்க ....
மீன் ஒன்றை பிடித்தேன் ....
இரண்டு உயிரை கொன்று ...
அன்று இன்பமடைந்தேன் .....
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

புல்வெளிக்கு விளையாட சென்றேன்.....
வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ...
மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே .....
ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு ....
படபடத்தது கலைத்து களைத்து ....
போராட்டத்தின் மத்தியில் பிடித்தேன்..!!!

அதன் மென்மை இறகு ...
சற்று கிழிந்தது பறக்க முடியாமல் ...
துடித்தது - பட்டாம் பூச்சியை பிடித்து ...
இன்பம் கண்ட  அன்றைய இன்பத்தை ....
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

தோட்டத்துக்கு புல்பிடுங்க சென்றேன் ....
துள்ளி துள்ளி குதித்து கன்றுகுட்டியை ....
தோட்டப்பயிரை நாசமாக்குது ....
பிடித்து கட்டு மகனே என்ற கட்டளைக்கு ....
உடனே அதை பிடித்து கட்டினேன் ....!!!

கட்டியவுடன் தூரத்தில் நின்ற தன்....
தாயை " அம்மா" என்றழைத்ததை ....
என்னை விளையாட விடுகிறார்கள் ....
இல்லையென்பதுபோல் கத்திய சத்தம் ...
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

அடம்பிடித்து கிளிக்கூடு வாங்கி ....
இரவுநேரம் தென்னம் பொந்துக்குள் ....
திருட்டுத்தனமாய் தாயிடம் இருந்து ...
குஞ்சை பறித்து கூட்டில் அடைத்து ....
பழமூட்டி எண்ணைதடவி கண்ட ...
இன்பத்தை    இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக