இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 மார்ச், 2016

உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!

இதய மன்மதன் 
இதய கோயில் வீதி 
இதயத்துடிப்பு ஒழுங்கை 
இதய நகர் -02

என்னுயிரே உனக்காக எழுதும் உயிர் மடல் ........!!!

நீ என்னிடம் நலமாகவே இருகிறாய் , இருப்பாய் உன்னை நான் இதயத்தில் வைத்திருப்பதால் நீ வேறு நான் வேறாக எப்பவுமே இருக்க முடியாது . என் இதயம் துடிப்பதே என் இதயத்தில் இருந்து நீ விடும் மூச்சு காற்றால் தான் என்பதை நான் கூறித்தான் நீ புரியவேண்டும் என்பதில்லை ......!!!

என்னவளே ....!!!

உன்னை பிரிந்து சிலமணிநேரம் வாழ்வது பிராணவாயு இல்லாத இடத்தில் நான் வாழ்வதற்கு நிகரானது உன் நினைவு என்னை வதைக்கும் போதெலாம் எனக்கு ஒன்றே ஒன்று தோன்றும் உனக்கு கடிதம் எழுதுவதே . இடை இடையே கவிதை போல் ஒன்றை கிறுக்குவேன் . அதை நீ கவிதையாக 
வாசித்துகொள் .......!!!

ஒரு 
நிமிடமேனும் உன்னை ....
நினைக்கவில்லை ....
என்றால் அந்த மணிநேரம் ...
நான் இறந்து பிறந்தேன் ....
என்பதுதான் கருத்து .....!!!

உன்னிடம் இருந்து வரும் கடிதம் வெறும் காகிதம் இல்லை. உன் இதயத்தின் உணர்வுகள் என்பதை 
அறிவேன் . காலம் தாழ்த்தாமல் எனக்கு ஒரு கடிதம் எழுது உயிரே .....!!!

இப்படிக்கு 
இதயத்தோடு காத்திருக்கும் 
இதய மன்மதன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக