இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 மார்ச், 2016

கனவாய் கலைந்த காதல் 13

பூவழகியின் வாழ்கையும் ....
அவளின் காதல் பதிலும் ....
பூவழகனை மனகுழப்பதில்....
தள்ளிவிட்டது .......!!!!

படிப்பையே நிறுத்தி விடுவமோ ....
அடிக்கடி குழப்பம் அடைந்தான் ......
பாடசாலை வருவான் யாருடனும் ....
பேசமாட்டான் தானும் தன் பாடும் ....
என்று பாடசாலை வந்து போனான் .....!!!

பூவழகன் வகுப்பில் பூமகள் .....
எப்போதுமே பூவழகன் மீது ....
உண்மை பாசமும் அன்பும் ...
கொண்டவள் கொண்டுவரும் ....
உணவை பூவழகனுக்கும்....
கொடுத்து சாப்பிடும் உள்ளம் ...!!!

பூமகள் வந்தாள் .....
பூவழகா வெட்கத்தை விட்டு ....
கேட்கிறேன் எந்த பெண்ணும் ...
உடனே கேட்கவும் மாட்டாள் ....
பூவழகா உன்னை எனக்கு ....
ரெம்ப பிடிக்கும் ஆனால் ....
உனக்கும் என்னை பிடிக்கணும் ....
நீ நல்ல பதிலை சொல்வாய் ...
நம்புகிறேன் உன் பதிலை ...
ஆழ்ந்து ஜோசித்து சொல் ......
ஏக்கப்பார்வையுடன் சென்றாள்....!!!

பூவழகன் மீண்டும் ஒரு ....
சங்கடத்தில் அகப்பட்டான் ....!!!

^^^
தொடர்ந்து வருவான் ...
இவன் கதை கூட உங்கள் ...
கதையாக இருக்கலாம் ....
கனவாய் கலைந்த காதல் 13
வசனக்கவிதை....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக