❤️அன்புடன் இன்றும் என்றும் கவிப்பேரரசு இனியவனின் இதயம் கவர்ந்த கவிதைகள் 💙
இந்த வலைப்பதிவில் தேடு
செவ்வாய், 3 டிசம்பர், 2013
பிரிந்து விட்டாயே ....!!!
எனக்காக வாழ்ந்தேன்
உனக்காக வாழ்ந்தேன்
நமக்காக வாழ நினைக்கும்
போது - பிரிந்து
விட்டாயே ....!!!
களைத்துவிட்டேன் .....!!!
காதல் தோல்வியால் நான்
அழவில்லை -ஏற்கனவே
உன்னால் அழுது
களைத்துவிட்டேன் .....!!!
தேவையில்லை ....!!!
உன்னை கண்டு துடிக்க
தெரிந்த இதயத்துக்கு
நடிக்க தெரியவில்லை
தெரிந்திருந்தால் -நான்
இப்போது துடிக்க
தேவையில்லை ....!!!
நம் காதல் ....!!!
நம் காதல் ஆலமரம் ...
இருந்தாலும் அசையாமல்
இருக்கும் -விழுது
விழுந்தாலும் மரமாக
எழும் நம் காதல் ....!!!
என் மனம் ...!!!
மயில் இறகின் மத்தியில்
காணும் வளையம் போல்
உள்ளதடி உன் முகம்
வருடிய காற்றில் அசையும்
இறகு
போல் என் மனம் ...!!!
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)