இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 டிசம்பர், 2013

வலியும் வரும்

பூக்களில் வாசம் வரும் 
மங்கையிடம் காதல் வரும் 
இதயம் என்றால் காதல் வரும் 
காதல் வந்தால் வலியும் வரும்

உன் காதல் வேண்டும் ...!!!

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத
மனம் வேண்டும்
ஜென்மங்கள்
மாறினாலும் மாறாத
உன் காதல் வேண்டும் ...!!!

பிரித்து வைப்பதற்காக .....!!!

நீ அழுகிறாய் எனக்காக
நான் உனக்காக அழுகிறேன்
நமக்காக அழுகிறார்கள்
இவர்கள் - எப்படியும்
எம்மை பிரித்து
வைப்பதற்காக .....!!!

என்ன தான் முடியும் ...?

நீ காதலிக்க மாட்டாய்
நன்றாகத்தெரியும் என்றாலும்
உன் நினைத்து கொண்டும்
பார்த்துக்கொண்டும் இருக்கிறேன்
ஒருதலை காதலால்
வேறு என்ன தான் முடியும் ...?

நீ தந்ததால் ...!!!

நீ தந்த நினைவுகாளால் .. 
என் கண்கள் கலங்குகின்றன . 
இதயம் கணக்கிறது 
சுமக்கிறேன் எல்லாம்
நீ தந்ததால் ...!!!