இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 3 டிசம்பர், 2013

யோசிக்கிறாய்...!!!

நீ என்னை காதலிக்க 
யோசிக்கிறாய்...!!!

நான் உன்னை கடவுளாக 
பார்க்கிறேன் ....!!! 

உருக்குலையாத காதல் வேண்டும் ...!!!

கண்ணோடு தோன்றி
கண்ணோடு மறையும்
கண்ணாம்பூச்சி காதல்
கண்ணே எனக்கு வேண்டாம் ...!!!

காதோரம் பேசி
காலத்தை வீணடிக்கும்
காற்றோடு போய்விடும்
காதல் எனக்கு வேண்டாம் .....!!!

கிளுகிளுப்புக்கு தோன்றும்
கிணற்று தவளை காதல்
கிடப்பில் கிடந்தது விடும்
கிட்டிய சந்தோச காதலும் வேண்டாம் ...!!!

குடும்பத்தில் பிளவையும்
குலத்துக்கே பொருந்தாத
குடும்ப சச்சரவை ஏற்படுத்தும்
குதூகல காதலும் வேண்டாம்.....!!!

உள்ளத்தையே உயிராக்கி
உடலையே உள்ளமாக்கி
உயிரே வதை பட்டாலும்
உருக்குலையாத காதல் வேண்டும் ...!!!

ஜெயம் பெறும் ...!!!

காதல் எதிர் பாராமல்
வருகிறது என்பது
நிஜம் தான் ...!!!
காதல் எதிர் பார்த்து
வருவதுதான்
ஜெயம் பெறும் ...!!! 

சுவாசிக்க முடியவில்லை ....!!!

மூச்சாக இருந்தவளே 
மீண்டும் வந்துவிடு 
உனக்கும் சேர்த்து 
சுவாசித்த என்னால் 
தனியே சுவாசிக்க 
முடியவில்லை ....!!! 

நான் மட்டுமே இருப்பேன்

அன்பே உன்னை உயிரே
என்று அழைக்க ஆயிரம்
பேர் இருக்கலாம்
உயிராய் உணர
நான் மட்டுமே இருப்பேன்