இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 ஜூன், 2014

காதலை கேவல படுத்ததே ....!!!

நீ விலக நினைத்தால் ..
உனக்கு சாதகமான ....
நியாயங்களை ....
உருவாக்காலம்....!!!

தயவு செய்து என்னை
வருத்து என் காதலை
கேவல படுத்ததே ....!!!
+
+
கே இனியவனின் 
உதிர்ந்த காதல் கவிதைகள்

காந்தமும் போல்....

தண்டவாளம் போல்...
பிரிந்து சென்றது நம்....
இரு உடலும் தான்....
காதல் இரும்பும்.....
காந்தமும் போல்....
இருக்கத்தான்.....
செய்கிறது ...!!!
+
+
கே இனியவனின் 
உதிர்ந்த காதல் கவிதைகள்

சுக்கு நூறாகியது

ஒரு கல் பட்டு கண்ணாடி
உடைந்ததை விட - அவள்
சொல்பட்டு  சுக்கு நூறாகியது
என் இதயம் ...!!!
+
+
கே இனியவனின் 
உதிர்ந்த காதல் கவிதைகள்

கல்லறைக்கு சமமான இதயம் .....!!!

அவள்
விட்டு போனது ...
என்னையும் ....
என் காதலையும் ...
என்னிடம் இருப்பது ..
கல்லறைக்கு சமமான
இதயம் .....!!!
+
+
கே இனியவனின் 
உதிர்ந்த காதல் கவிதைகள்

உடலும் நிழலுமாய் மாறிவிட்டது ....!!!

உன் நினைவுகளால்
தேன் கூடு கட்டுகிறேன்
நீ நெருப்பு மூட்டி
கலைக்கிறாய் .....!!!

காதல் முத்து  தான்
விளைந்தால் மட்டும்
விளைய மாட்டேன்
என்கிறது -நம் காதல் ...!!!

உயிரும் உடலுமாய்
இருந்த காதல்
உடலும் நிழலுமாய்
மாறிவிட்டது ....!!!


கஸல் 701