இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 நவம்பர், 2015

என்னோடு இருந்தவளே ....!!!

என்
ஆனந்த காற்றாய் ....
ஆரோக்கிய காற்றாய் ....
என்னோடு இருந்தவளே ....!!!

சிரிக்கும்போது ....
உன்னோடு சத்தமாய் ....
சிரித்தேன் ....
அழும்போது தனியே ....
உனக்கு கூட தெரியாமல் ....
அழுகிறேன் ....
என் அழுகையால்....
உன்கண்கள் கலங்கிட கூடாது ....!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

கருகாத பூக்கள் .....!!!

கருகாத பூக்கள் .....!!!
-------
எம் .....
மண்ணில் தான் ....
கறுப்பு பூக்கள் அழகழகாய் ....
பூத்தது - பூத்த பூக்கள் ....
வாடிவிட்டதே - நினைக்காதீர் ....
எம் மனதில் என்றும் வாடாமலர் ....
உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!

எம் 
மண்ணில்தான் கடலில் ....
நீலபூக்கள் பூத்தன ....
பூத்த பூக்களை அலை ....
அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....
கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....
காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!

கறுப்பு எண்ணங்களாலும் ....
கருப்பு ஜூலையாலும் ....
கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....
கறுப்பு சிந்தனைகளால் ....
கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....
கருகாத பூக்கள் .....!!!

ஞாயிறு, 22 நவம்பர், 2015

எதுவுமே நிஜமில்லை

காதலோடு வாழ்ந்த நீ 
இறக்கிவைத்துவிட்டு ....
என்னை சுமைதாங்கி ...
ஆக்கிவிட்டாய் ....!!!

எதுவுமே நிஜமில்லை 
காதல் மட்டுமே நிஜம் ....!!!

இதுவரை ....
என் எழுத்து கருவி ....
என் துன்பத்தையே ....
எழுதிகொண்டு இருக்கிறது ....
கொஞ்சம் உன்னை பற்றி...
எழுதபோகிறேன் ...
தாங்கிகொள் ....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 905

என்னை நீ அணைத்து

எரிந்து கொண்டிருக்கும் 
காதலை அணைத்துவிடு ...
என்னை நீ அணைத்து....!!!

நீ .....
ஒளி காத்திருக்கிறேன் ...
நீ உதிக்கும்வரை .....
நான் உன்னில் மறையும் ...
வரை காத்திருப்பேன் ...!!!

இந்த 
உலகம் அழிய வேண்டும் ....
புதிய உலகில் நாம் தான் ....
முதல் காதலர் என்ற ....
வரலாறு படைக்கவேண்டும் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 904

இதயமே கவனமாய் இரு

புவியீர்ப்பால் ....
பொருட்கள் கீழே வரும் ....
கண் ஈர்ப்பால் ....
காதல் உள்ளே வரும் ...!!!

என்னை கவிதை ....
எழுத வைத்தவளே ....
கண்ணீர் அஞ்சலி ....
எழுத வைத்துவிடாதே ....!!!

இதயமே ....
கவனமாய் இரு ....
என்னை பார்த்து ....
சிரிக்கபோகிறாள்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 903