இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஒரு சொல் கவிதைகள்

ஒரு சொல் கவிதைகள்

நீ 
நான் 
காதல் 

@ 

தீ 
சுடும் 
சொல் 

@ 

வா 
போ 
பிரிவு 

@ 

இருந்தாய் 
சென்றாய் 
வலி 

@ 

நினைவு 
கனவு 
தோல்வி

வியாழன், 3 டிசம்பர், 2015

என்னவளின் டயறி

என்னவளின் டயறி 
---
கண்களால் காதல் தந்து ....
நினைவுகளை மனதில் சுமந்து ....
வலிகளால் வரிகளை வடித்து ....
என்னவளின் காதல் டயறி ....
கண்டெடுத்தேன் கணப்பொழுதில் ....
என் மீதுகொண்ட கவலைகளை ....
தன் காகிதத்தில் பதிந்திருக்கிறாள்....
காகிதங்கள் கூட ஈரமாய் இருக்கிறது ....
அவைகூட அழுதிருக்கிறது ....!!!

+
காதல் நினைவுகளும் 
காதல் டயறியும்
என்னவளின் பக்கம்( 01)

உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

இயற்கை அன்னையே கொஞ்சம் கருணை காட்டம்மா
-----------------
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
-----------------
போதுமம்மா நீ கோராத்தாண்டவம் ஆடியது .
தண்ணீரின் அளவு கூடி கண்ணீரின் கூடிவிட்டதம்மா ....!!!

குழந்தைகள் ....
முதியவர்கள் ....
கர்ப்பிணி தாய்மார்கள் ....
நோயாளிகள் .....
விசேட திறனாளிகள்....
படும் வேதனையை வரிகளால் ...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

வீட்டோடிருந்த வளர்ப்பு பிராணிகள் .....
ஊர்வன ,பறப்பன . நடப்பன ....
படும் வேதனைகள் வரிகலாளால்....
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

அன்புள்ள வர்த்தகர்களே .....
நீங்கள்படும் வேதனைகள் உலகம் ....
அறியும் உங்களுடம் இருக்கும் இருப்பை ....
உள்ளவிலைக்கே வழங்கி தவிக்கும் ...
மக்களுக்கு உதவிசெய்வீர்களாக .....!!!

அரசியல் வாதிகளே ....
எல்லாவற்ரையும் அரசியலாக்காதீர்கள் .....
மக்களின் துன்பத்தை இலாபமாக ....
பயன்படுத்தாதீர் ......!!!

என் உறவு மக்களே ....
இப்போது யாரையும் எதிர்பார்காதீர் .....
முடிந்தவரை அருகில் உள்ளவர்கள் ....
அருகில் உள்ளவர்களுக்கு உதவுவதே ....
இப்போதைய கடமை .....
உயிரை காப்போம் .....!!!
அருகில் உள்ள உறவை காப்போம் ....!!!

இது கவிதையல்ல என் தவிப்பு ....
வரிகள் கூட வரமறுக்கிறது ....
உறவுகள் தவிக்கும்போது ....
கவிதைகள் எப்படி வரும் ....?

+
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

புதன், 2 டிசம்பர், 2015

காதல் ஹைக்கூகள்

காதல் ஹைக்கூகள் 

தொலைவில் நின்றாள்
அருகில் வந்தாள்
தொலைந்துபோனேன் 

@@@

உதடு அசைந்தால் காதுக்கு இன்பம் 
விழி அசைந்தால் கண்ணுக்கு இன்பம் 
என்னவள் 

@@@

மூச்சு கொதிக்கிறது 
இதயம் வலிக்கிறது 
அவள் மௌனம் 

@@@

எதுவும் செய்வேன் 
எதுவும் செய்யமாட்டேன்
என்னவளுக்காக 

@@@

இறந்தபின் சிறந்த தானம் 
காதலின் தொடக்க ஸ்தானம் 
கண்

அம்மா ஹைக்கூக்கள்

அம்மா ஹைக்கூக்கள் 
------

இன்பத்தின் சொல் 
இடரின் சொல் 
------அம்மா -----

@@@

நுனிநாக்கில் ஆங்கிலம் 
இடறிவிழுந்ததும் தமிழ் 
------ அம்மா -------

@@@

உயிரோடு இருந்தாலும் தெய்வம் 
இறந்த பின்னரும் தெய்வம் 
---- அம்மா -------

@@@

பிறப்புக்கு முன் சுமக்கும் 
பிறப்புக்கு பின் சுமக்கும் 
-----அம்மா -------

@@@

அ - அகிலத்தின் பிரம ஒளி
அ - உயிரெழுத்தின் ஆரம்ப ஒளி 
----- அ - அம்மா உயிரின் ஆத்மா ஒளி -----

+
கே இனியவன் ஹைக்கூகள்