இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 டிசம்பர், 2015

உலக சாததையா செய்யப்போகிறாய் ....?

நீ ...
எத்தனை வருடம்... 
மௌனமாய் 
இருக்கபோகிறாய்...?
உலக சாததையா 
செய்யப்போகிறாய் ....?
அதிககாலம் மௌனமாய் ...
இருந்த ஜோடி நாம் என்று ...?

இன்னும் சிலமணி நேரமே .....
இருக்கிறது முடித்துவிடு ....
மௌனத்தை - வேண்டாம்...
அடுத்த வருடத்துக்கும் ....
துன்பம் ......!!!

என்னோடு பேசிவிடு ......!!!

அன்பே 
இன்று வருடத்தின் ....
இறுதிநாள் இன்றாவது 
என்னோடு பேசிவிடு ......!!!

கடந்த
வருடத்தில் நடந்தவை .....
கடந்தவையாகட்டும் .....
நடத்து வந்ததை மறந்து ...
நடக்கப்போவதை நினை ....!!!

பிறப்பது புத்தாண்டாயின் .....
நீ என்னோடு இணைவதில் ....
தங்கியுள்ளது எனக்கு ....
இல்லையேல் பொழுது விடியும் ....
வருடம் மாறாது எனக்கு ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

நான் இறந்ததை நானே பார்க்கிறேன்

உன்னை பிரிந்த பின்
என் இறந்த உடலை ....
நானே பார்கிறேன் ....!!!

என்
இறந்த உடலுக்கு அருகில் 
நீயும் நிற்பதை நான்
பார்க்கிறேன் .....!!!

நான் இறந்தபின் என் ...
உடலை பார்ப்பதும் ....
நீ அருகில் இருப்பதையும்
பார்க்கும் முதல் மனிதன் ....
நான் தான் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

மரண ஊர்வலத்தை பார்த்துகொண்டிருகிறாய்....!!!

நீ என்னோடு ....
கோபமாய் இருக்கிறாய் ....
நன்கு தெரிகிறது ...
என்னோடு பேசும்போதே ...
பூமரத்தின் இலையை ....
பித்துகொண்டு இருகிறாய்
பாவம் அதை நிறுத்து ....
அது என்னசெய்தது உனக்கு....?

உன் கோபத்தால் ....
நான் உயிரோடு இருந்தும் ....
என் மரண ஊர்வலத்தை ....
பார்த்துகொண்டிருகிறாய்....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

புதன், 30 டிசம்பர், 2015

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!!

ஆங்கில புத்தாண்டே வருக வருக....!!! 
-------

அழிவை ஏற்படுத்தாமல் .....
அன்பை பெருக்கிட..வருக வருக ....!!!

ஆக்ரோயத்தை காட்டாமல் .....
ஆனந்தத்தை ஏற்படுத்த ..வருக வருக ....!!!

இழப்புகளை ஏற்படுத்தாமல் ....
இன்பத்தை தோற்றுவிக்க ..வருக வருக ....!!!

ஈனச்செயல் புரியாமல் ....
ஈகையை வளர்த்திட ..வருக வருக ....!!!

உலகை உலுப்பாமல்....
உள்ளம் மகிழ்ந்திட ...வருக வருக ....!!!

ஊனங்களை ஏற்படுத்தாமல் ....
ஊர் செழிக்க ..வருக வருக .....!!!

எதிரிகளை தோற்றுவிக்காமல் ....
எளிமையை தோற்றிவிக்க ..வருக வருக....!!! 

ஏமாற்றங்களை ஏற்படுத்தாமல் ....
ஏற்றங்களை தந்திட ..வருக வருக .....!!!

ஐயத்தை தோற்றுவிக்காமல் ......
ஐகியத்தை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஒற்றர் வேலைகள் பார்க்காமல் ....
ஒற்றுமையை ஏற்படுத்திட ..வருக வருக ....!!!

ஓலமிட மக்களை வைக்காமல் .....
ஓர்மத்தை ஏற்படுத்திட ...வருக வருக ....!!!

ஔடத்தை பாவிக்காமல் .....
ஔவை வாழ்க்கை நெறிப்படி வாழ்ந்திட ....வருக வருக ....!!!

^

கவிப்புயல் இனியவன் 
யாழ்ப்பாணம்