இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 அக்டோபர், 2016

நண்பா அறிவுரை கேட்பாயா ...?

நண்பா ....
அறிவுரை கேட்பாயா ...?
மனம் திறந்து பேசு ....
மனதில் பட்டதெல்லாம் ..
பேசாதே ....
சிலர் புரிந்து கொள்வார்கள் ...
சிலர் பிரிந்து செல்வார்கள் ....
இரண்டிலும் நன்மைகளும் .....
தீமைகளும் உண்டு .....
&
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

வலிக்கிறதா

இதயத்தை .....
கிள்ளிப்பார்த்துவிட்டு ......
வலிக்கிறதா என்று கேட்டால் ...
காதல் ...!!!

இதயத்தை ......
கிள்ளிப்பார்காமலே ...
வலிக்கிறதா என்று கேட்டால் ...
நட்பு ...!!!

இதயத்தில் ....
இருந்துகொண்டு ....
கிள்ளிக்கொண்டே ....
இருந்தால் .......
மனைவி ..........!!!

&
கவிப்புயல் இனியவன்

முன்னோர் சொன்னது ..!!!

இயந்திர உலகில் .........
ஓடிக்கொண்டிருப்பது ..
கடிகாரமில்லை ...!

நீதான்
பெரியமுள் - உன் ஆயுள்...
சிறியமுள் -உன் உயர்வு...
வினாடி முள் -உன் முயற்சி...
வேக வேகமாக முயற்சி செய் ..
நேரம் பொன்னானது .....
முன்னோர் சொன்னது ..!!!

&
சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன் 

புதன், 19 அக்டோபர், 2016

வறுமையின் நிறம் கொடுமை

வறுமையின் நிறம் கொடுமை
-------------
பத்து பாத்திரம் .....
வீடு வீடாய் கழுவுவத்தும் ....
எனக்கு ஒரு சுகம் ....
இருக்கத்தான் செய்கிறது .....
கழுவும் வாசனையில் ....
என் மனமும் வயிறும் .....
நிரம்புகிறது .........!!!
&
வறுமையின் நிறம் கொடுமை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 18 அக்டோபர், 2016

சமூதாய கவிதை

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

பத்திரிகையை விரித்தால்....
பத்துவயது சிறுமி ......
வண்கொடுமை .........
தொலைக்காட்சியை போட்டால்.....
கள்ளதொடர்பால் .......
மனைவி வெட்டிகொலை ......
சமூகதளங்களை.......
பார்த்தால் கூட்டமாக.....
சுட்டுகொல்லும் வீடியோ...........!!!

வயிற்றை நிரப்ப பட்டினி போராட்டம்.......
தற்பெருமை பேசிய அரசியல் போராட்டம்.....
மதவெறி போராட்டம்......
இனவெறி போராட்டம்......
சுயநல போராட்டம்......
சுயநலத்துக்காய் அரசியல் போராடம்.......!!!

எத்திசை பார்த்தாலும் .....
செத்து கொண்டிருக்கிறது.....
உலகம்- குற்றுயிரும்.....
குறையுயிருமாய்
செத்துகொண்டிருக்கிறது......
உலகம்........!!!

&
சமூதாய கவிதை
கவிப்புயல் இனியவன்