இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 நவம்பர், 2016

கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

என்னை கவிதையால் ....
கொல்லாதே என்று ....
அடிக்கடி கூறுகிறாய் .....
நீ என்னை நினைவாலும் ....
கனவிலும் கொல்லுகிறாய்.....
அதனால் நான் கவிதையால் ...
கொல்கிறேன் மன்னித்துவிடு ....!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

இதயத்தில் சுமக்கும் தாய் ......!!!

நீ
பேசாமல் இருக்கும் ....
நாட்களை விட .....
பேசிய நாட்கள் ......
வலி அதிகம் .........!!!

உன்னை
பற்றி ஒன்றுமே பேசாமல் ....
என்னைப்பற்றியே பேசி .....
வலியை தருகிறாய் .....
நீ என்னை இதயத்தில் .....
சுமக்கும் தாய் ......!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

தவித்துக்கொண்டு இருக்குதே ......!!!

செயற்கை சுவாசம் ....
கொடுத்து உயிரை ....
காப்பாற்றுவதுபோல் ....
உன் மூச்சு காற்று பட்டு .....
நான் வாழ்கிறேன் ....!!!

துடித்து கொண்டிருந்த .....
என் இதயத்தில் என்ன ....
மாயம் செய்தாய் .....?
இப்போ தவித்துக்கொண்டு ....
இருக்குதே ......!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 1 நவம்பர், 2016

காதல் அழகிய கதிர் ......!!!

உணர முன் காதல் ....
புரியாத புதிர் .......
உணர்ந்த பின் காதல் ....
அழகிய கதிர் ......!!!

காதலுக்கு வலியும்....
ஒரு வேலிதான்.....
தாங்க முடித்தவர்கள் ....
தாண்ட மாட்டார்கள் .....!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

ஒரு ஜீவாத்மாவின் கவிதை

ஒரு ஜீவாத்மாவின் கவிதை ----------------- என்னை அவர்கள் மதிக்கவில்லை...... என்று கோபப்படாமல்...... அவர்கள் மதிக்கும்படி........ நான் மாறவில்லை என்று ...... கவலைப்படு - காரணத்தை..... தேடு மதிக்கப்படுவாய்.......!!! பாராட்டும் போது...... துள்ளி குதிக்கும் மனம் ....... விமர்சிக்கும் போது....... துவண்டு விழுகிறாய்....... அப்போ உன் மனத்தை ...... கடிவாளம் போட்டு .... வழிநடத்துகிறாய்.......... கடிவாளத்தை கழற்று ...... சவாரிசெய் நிச்சயம் விழுவாய்...... காயப்படுவாய்....... ஆனால் வாழ்க்கையில் ...... வெற்றி பெறுவாய்,............!!! கரையில் நின்று கடலை ...... பார்த்தால் தப்புக்கடலும்..... சமுத்திரமாய் தெரியும்....... ஆழ்கடலில் நின்று கரையை.... பார்ப்பவனுக்கு கடலும் கரையும்..... ஒன்றுதான் ......... எல்லவறையும் சமனாக....... நோக்குபவனே ....... சாதனையாளனாகிறான்.....!!! & ஒரு ஜீவாத்மாவின் கவிதை கவிப்புயல் இனியவன்