இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 5 ஏப்ரல், 2017

இன்பம் தந்த காதலை ....!

இழந்தது ......
கோடி கணக்கான ...
சொத்தென்றால் கலங்க ...
மாட்டேன் - கோடி இன்பம்
தந்த காதலை ....!

&
சின்ன சின்ன கவிதைகள் 07
கவிப்புயல் இனியவன்

என்னவளும் தான் ....!

தூரத்தில் அழகானது ....
நிலா மட்டுமல்ல ....
காதலோடு இருக்கும்....
என்னவளும் தான் ....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 4 ஏப்ரல், 2017

சிக்கி தவிக்கிறேன் ...

பேச்சும் மூச்சுமாய் ....
இருந்த நம் காதல் ...
இறுதி மூச்சை இழுத்த ..
வண்ணம் இருக்கிறது ....!!!

&

சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

&

சிலந்தி வலைபோல் ...
அழகாக இருக்கிறது
நம் காதல் -. நானோ
சிக்கி தவிக்கிறேன் ...!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

சின்ன சின்ன கவிதைகள்

என்னவளே ...
நீ காலை மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
அப்போதுதான்
வாடவேமாட்டாய் ...!

&&&


உன் ....
வாழ்க்கைக்காக ...
என் வாழ்க்கையை.....
பறித்தவள் -நீ
சந்தோசமாய் இரு .......!

&&&

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

&
சின்ன சின்ன கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

சனி, 1 ஏப்ரல், 2017

தாய் தந்தை கவிதைகள் 02

தந்தையின் அழகு.....
முதுமையில் தெரியும்.....
ஒவ்வொரு தோல் சுருக்கமும்....
ஒவ்வொரு கடின தியாகத்தை.....
எடுத்து காட்டும்.......!

எனக்கு நினைவுள்ளவரை.....
கோயிலில் அவர் சுவாமி.....
சுமந்ததே இல்லை ஆனால்.....
என்னை தோளில் சுமக்காத.....
நாளே இல்லை.........................!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்