இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 ஏப்ரல், 2017

2017 சித்திரை தமிழ் புத்தாண்டு

2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு
வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம்
-----------------------------------------

வருக வருக புத்தாண்டே வருக ......
தருக தருக இன்பவாழ்க்கை தருக......
பொழிக பொழிக வளம் பொழிக .....
வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!!

போ போ பழைய ஆண்டே போ .....
ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு .....
போதும் போதும் துன்பங்கள் போதும் ....
மேலும் மேலும் தாங்க முடியவில்லை....!

அணு அணுவாய் பெற்றோம் இன்பம் .....
வண்ண வண்ண கனவுகள் கண்டோம் ....
விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் ....
ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!!

இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே ....
அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே...
உழைக்க உழைக்க உடல் உறுதியை தா புத்தாண்டே...
நினைக்க நினைக்க ஞானத்தை தா புத்தாண்டே.....!!!

^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் - ஈழதமிழ்

புதன், 12 ஏப்ரல், 2017

காதலுக்கு சொர்க்கம்......!

கண்ணை திறந்து கொண்டும்.....
கண்ணை மூடிக்கொண்டும்.....
கனவு காணும் அபூர்வ சக்தி.....
காதலருக்கே உண்டு...............!

அணைத்து கொண்டு இருப்பது.......
காதலுக்கு இன்பம்..........
நினைத்து கொண்டிருப்பது.......
காதலுக்கு சொர்க்கம்......!

&
சின்ன சின்ன கவிதைகள் 13
கவிப்புயல் இனியவன்

இதயம் மட்டுமே அறியும்....!

உன் ......
கண் சொல்கிறது.....
என் மேல் உள்ள காதலை.....
நீ முகம் திருப்பினால்..........
மறைந்து விடாது காதல்.....!

நீ
கண் இமைக்கும் நேரத்தில்....
நான் காணாமல் போய்.......
விடுவேனோ என்பதற்காய்......
நீ படும் வேதனையை என்......
இதயம் மட்டுமே அறியும்....!

&
சின்ன சின்ன கவிதைகள் 12
கவிப்புயல் இனியவன்

காதல் காவியங்களே.........!

காதலின் சின்னம்......
கல்லறையாக இருக்கிறது.....
கல்லறைக்கு பின்னரும்............
காலத்தால் நிலைத்திருப்பதால்......!

நிலையில்லாத உயிருக்கு.......
நிலையான இடத்தை கொடுப்பது.....
காதல் காவியங்களே.........!
&
சின்ன சின்ன கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

காதல் தராசு ......

உடலால் நீ என்னை.....
பிரிந்தாலும்.......
இதயத்தில் பத்திரமாய்......
இருகிறாய்...........
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

காதலில் சேர்ந்து.....
வாழ்பவர்களும் ......
பிரிந்து வாழ்பவர்களும்.....
சமமாய் இருப்பதால்....
காதல் தராசு ......
சமமாக இருகிறது...... !

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 197