இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 3 ஜூன், 2017

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

----------------
கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
----------------

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
-------------------------------------!
வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
-------------------------------------!
எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம்
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
------------------------------------!
தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
-----------------------------------!
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்

வியாழன், 1 ஜூன், 2017

ஹைக்கூ கவிதை

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

^

குழந்தை தொழில் சட்டவிரோதம்
மூடை சுமக்குறது குழந்தை
புத்தகப்பை

^
பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்

^
ஹைக்கூ கவிதை
♥♥கவிப்புயல் இனியவன்♥♥

மாட்டிறைச்சிக்கு தடை

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

^

குழந்தை தொழில் சட்டவிரோதம்
மூடை சுமக்குறது குழந்தை
புத்தகப்பை

^
பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்

^
ஹைக்கூ கவிதை
♥♥கவிப்புயல் இனியவன்♥♥

திங்கள், 29 மே, 2017

உணவை விரயமாக்காதீர்........

யாருக்கு வரும் இந்த தைரியம் ....?
-------------------------------------------------

அதிகாலையில் துயில் எழுந்து ...
தூரத்துபார்வை தெரியாத பொழுதில் ...
தலையிலே கம்பீர தலைப்பாகை ...
கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு ...
தோளிலே மண்வெட்டி - உழைப்பையே
காட்டும் விவசாய பாரதி -நீ
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

கொட்டும் மழையில் ....
உடல்விறைக்க.உழைப்பாய்  .......
வாட்டும் வெயிலில் ...
குருதியே வியர்வையாய் .......
வெளிவர உழைப்பாய் .............
நட்டுநடு ராத்திரியில் ...
காவல் செய்யவும் புறப்படுவாய் ..
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

பட்ட விவசாய கடனை அடைக்க
பட்டையாய் உடல் கருகி ....
விற்று வந்த வருவாயை ..
கடனுக்கே கொடுத்துவிட்டு ...
அடுத்துவரும் காலத்தில் சாதிப்பேன் ..!
அதுவரையும் காத்திருக்கும் -துணிவு
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

உச்ச அறுவடை பொழுதினிலே ...
உச்ச சந்தோசம் பொங்கிடும் வேளையிலே ..
நட்டுநடு ராத்திரியில் அடித்துபெய்யும்...
பேய் மழையால் -அறுவடைக்கு தயாரான ....
விளைபொருள் வெள்ளத்தில் மிதக்கும் .....
அப்போதும் சிரித்தமுகத்துடன் ....
அடுத்த காலத்தை நம்பிக்கையுடன் .....
இருக்கும் -உன் மனதைரியம்உன்னைவிட.....
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

நச்சுபொருளுடன் ..........
நாளாந்தம் விளையாடுவாய் ...
இத்தனை துன்பம் வந்தாலும் .....
நச்சு பொருளை உண்டு மடியாத ....
உன் மனதைரியம்...!
யாருக்கு வரும் இந்த தைரியம் ....?

காதலில் தோற்றால் நஞ்சு .....
பரீச்சையில் தோற்றால் நஞ்சு.....
நண்பனிடம் சண்டையிட்டால் நஞ்சு .....
இத்தனை துன்பம் வந்தபோதும்.....
நஞ்சை அருந்தாதவிவசாய தோழனை .........
நான் உணவு தரும் ......
கண்கண்ட கடவுள் என்பேன் ......
வணங்குகிறேன்.....................!

உணவை விரயமாக்காதீர்........
சிதறிகிடக்கும் சோறு ஒவ்வொரும்......
இறந்து கிடக்கும் விவசாயியின்......
உடல் என்பதுபோல் கற்பனை செய்.....
உன்னை அறியாமல் கண்ணீர் வரும்.......
அரியும் சிவனும் சேர்ந்ததே "அரிசி"....
ஒவ்வொரு சோறும் இறைவன்.............!

&&&
கவிப்புயல் இனியவன்
( இந்த கவிதையை விவசாயிகளுக்கு சமர்பிக்கிறேன் )

சின்ன கிறுக்கல்

இன்று என்னை
........பிரிந்தாலும்..!
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும் ....!
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!

&
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்

^^^

எனக்கொரு ஆசை ...
நீ ....
ஒருநிமிடமாவது ....
எனக்காக வாழ்வதை ....
நான் பார்க்கணும் ....!

&
சின்ன கிறுக்கல்
கவிப்புயல் இனியவன்

^^^