இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 1 ஏப்ரல், 2019

காயப்படுத்திய உனக்கு.....

நீ
மௌனமாய் இருப்பதில்....
புரிகிறது என் காதலுக்கு....
மலரஞ்சலி வைத்தது....
நீ..........!!!

காதலுக்கு உரமே......
கனிவான பேச்சு......
காயப்படுத்திய உனக்கு.....
அதெல்லாம் எப்படி......
புரியும்........?

நீ
பார்த்தநாள்...!
மரணம் தாண்டி
வாழ்ந்த நாள்.....
இனி...............
இறந்தாலும்.......
உயிர்ப்பேன் ..........
உன் கண்ணை விட
கொடிய விஷம்
எதுவும் இல்லை ....!

@
இப்படிக்கு உன்.....
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 19 மார்ச், 2019

கவிதை சொல்கிறேன்....!

உனக்கு எனக்கும்.....
ஒரே ஒரு வித்தியாசம்....
நீ கண்ணால் கவிதை....
சொல்கிறாய்......
நான் எழுதுகருவியால்....
கவிதை சொல்கிறேன்....!
&
கவிப்புயல் இனியவன்
19.03.2019

திங்கள், 21 ஜனவரி, 2019

ஹைக்கூ கவிதை

நித்தம் போனபோதும்
முகம் சுழிக்கவில்லை
மணிமுள்
@
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

காலைக் கடிக்கமுன்
கையைபலமாகக்கடித்தது
புதுச்செருப்பு
@
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

காதலில் எரிகிறேன்.....!

காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!

உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!

பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை