இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 13 மார்ச், 2021

பிரபஞ்சத்துக்கு நிகரான சக்தி பெண்கள்

 பிரபஞ்சத்தின் பெரும் சக்தி பெண்களே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிரபஞ்சத்தின்
தொழிற்பாடு
ஆக்கி வழங்குவது //

ஆக்கத்துக்கு திறனும்
வழங்குவதற்கு
மனமும் //

ஆற்றலும் ஆளுமையும்
பெண்களுக்கே உண்டு //

கோள்களின்  இயக்கம்
சக்தி களமாகும் //

சக்தி  இல்லையேல்
செயல்கள் இல்லை //

குடும்பத்தை இயக்கும்
சக்தி பெண்களே //

உயிரையும் உணவையும்
ஆக்கும் சக்தி //

உடல் உழைப்பால்
படைத்தல் தொழில் //

உள்ளத்தின் உழைப்பால்
காத்தல் தொழில் //

பிரபஞ்சத்துக்கு
நிகரான
சக்தி பெண்கள் //

@

கவிப்புயல் இனியவன்

சிறு கவிதை

 

---------------------
சில்லென்று வீசும்
சிறுமழைத் தூறல்
நிலத்துக்கு முத்தம்

******************
காதுகளை கௌவும்
காற்றின் ஆவிகள்
இசை

*********************
சிந்தனை கதவை
திறக்கும் சாவி
அறிவு

********************
இருட்டு குடிசை
விரட்டும்பேய்
ஒளி

*********************

உயிரின் கதவை
இறுக்கும் பூட்டு.
சாவு

&
கவிப்புயல் இனியவன்
[3/3, 7:02 AM] KR.Uthayan sir: பிரபஞ்சத்தின் பெரும் சக்தி பெண்களே
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

பிரபஞ்சத்தின்
தொழிற்பாடு
ஆக்கி வழங்குவது //

ஆக்கத்துக்கு திறனும்
வழங்குவதற்கு
மனமும் //

ஆற்றலும் ஆளுமையும்
பெண்களுக்கே உண்டு //

கோள்களின்  இயக்கம்
சக்தி களமாகும் //

சக்தி  இல்லையேல்
செயல்கள் இல்லை //

குடும்பத்தை இயக்கும்
சக்தி பெண்களே //

உயிரையும் உணவையும்
ஆக்கும் சக்தி //

உடல் உழைப்பால்
படைத்தல் தொழில் //

உள்ளத்தின் உழைப்பால்
காத்தல் தொழில் //

பிரபஞ்சத்துக்கு
நிகரான
சக்தி பெண்கள் //

@

கவிப்புயல் இனியவன்

துடிப்பாக வைத்திருக்கிறேன்.. !

 பட்டாம்
பூச்சியின் அழகை
ரசித்தேன்......!!!

பூத்து குலுங்கும்
பூவை ரசித்தேன்....!

ஆயிரம் கனவுகளை
இரவில் ரசித்தேன் ..... !

என்னவளே ....
உன்னை ரசிக்கவில்லை
சுவாசிக்கிறேன் ....
உன்னை நினைப்பதில்லை
துடிப்பாக வைத்திருக்கிறேன்.. !

&
கவிப்புயல் இனியவன்
🌹
தேனிலும் இனியது காதலே
🌹🌹🌹

மறப்பதில்லை

 தலைப்பு : நெஞ்சம் மறப்பதில்லை
@

ஒருபிடி இதயத்தில்...
ஓராயிரம் நினைவுகள்.. /

நெஞ்சம் முழுதும்..
நீங்கா நினைவுகள்.../

துடிக்கும் இதயத்தை...
உயிரே பார்த்திருப்பாய்.../

வலிக்கும் இதயம்
என்னிடம் உள்ளதடி.. /

காதல் உள்மூச்சு...
வெளிமூச்சு இல்லையடி.. /

என்னை இதயம்...
மறந்து நாளாயிற்று.... /

உன்னை நினைக்காத...
நொடியே இல்லையடி... /

நினைவுகளால் இதயம்..
நிரம்பி வழிகிறது... /

கல்லுமுண்டு முள்ளுமுண்டு...
இனிக்கும் கரும்புமுண்டு... /

நினைவுகளை மறப்பதாயின்..
மண்ணோடு மடியவேண்டும்.. /
@
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 7 மார்ச், 2021

இறந்தும் துடிக்கும்

 காதல்.......
ஆனந்த கண்ணீரில்...
ஆரம்பித்து.......
ஆறுதல் கண்ணீரில்.....
முடிகிறது..........!!!

முகில்களுக்கிடையே....
காதல் விரிசல்.......
வானத்தின் கண்ணீர்......
மழை..........................!!!

நான்
வெங்காயம் இல்லை....
என்றாலும் உன்னை.....
பார்த்தவுடன் கண்ணீர்....
வருகிறது................!!!

&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்