இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 9 நவம்பர், 2013

ஒரு வரி-மறக்காமல் இருக்கிறது

இதயம் என்னை மறந்து விட்டது உன்னை மறக்காமல் இருக்கிறது 

ஒருவரி -இதயம் பறக்கிறது

நீ அங்கு வரும் போது இங்கு இதயம் பறக்கிறது 

ஒருவரி -இரண்டும் உயிர்

காதலும் காற்றும் ஒன்றுதான் இரண்டும் உயிர் 

வெள்ளி, 8 நவம்பர், 2013

ஏன் கைவிட்டாய் ....!!!

காதல் தூண்டில் நீ
துடிக்கும் மீன் நான்
என் தூண்டிலை ஏன்
கைவிட்டாய் ....!!!

நித்திரைக்கு போகமுன்
நானும் ஒரு பிச்சை காரன்
தான் - நினைவுகளால் ...!!!

உன் கண் உனக்கு கண்
எனக்கோ கண்ணி வெடி ...!!!

கஸல் ;570

காதலை மாற்ற முடியவில்லை .....!!!

என்
கவிதைகள் வலிக்கிறது
என்கிறாய் வலிக்காமல்
என்னசெய்யும் உன் செயலால்

உன் காதலுக்கு அஞ்சி
என் இருப்பிடத்தையே
மாற்றி விட்டேன்
காதலை மாற்ற
முடியவில்லை .....!!!

உன் கண்ணால் என்னை
பார்த்தேன் என் கண்ணால்
நீ யாரை பார்க்கிறாய் ....!!!

கஸல் 569