இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 நவம்பர், 2016

கல்லறைக்கு என்றாலும் ...?


 கல்லறைக்கு என்றாலும் ...?

 கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 8:58 am
காத்திருப்பதில் பயனில்லை ...
அவள் வரமாட்டாள் ....
அவளை மறந்துவிட்டாள் ....
நண்பர்களின் அர்ச்சனை இவை ...
நான் காத்திருக்கிறேன் ...
காத்திருப்பேன் ...
கல்லறைக்கு என்றாலும் 
வருவாள் என்று ....!

எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...


எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...

 கவிப்புயல் இனியவன் on Sat Apr 06, 2013 8:34 am
எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...
இப்போது உன்னைக்ககண்டால் அஞ்சுகிறேன் ...
உன்னை மறக்க நினைக்கும் போது ....
உயிர் வாழுகிறேன் ..
உன்னை நினைக்கும் போது..
இறந்துவிடுகிறேன் ..

இப்படி எத்தனைநாள் தான் வாழுவது ...?
உன்கண்ணில் இருந்து தப்புவதற்காக ...
கண்ணாடி அணிந்தேன் 
உன்னை கண்டவுடன் முறைத்து பார்க்க வேண்டும் 
என்பதற்காக கண்ணாடி முன் முறைத்து பார்த்து 
பழகினேன் ...

எல்லாம் வீணாகிப் போய்விட்டது ...
நீ அருகால் செல்லும் போது ...
என் இதயம் எயமானை கண்ணட நாயைப்போல் 
என்னிடம் வந்துவிடுகிறதே ....!

என்ன உலகமடா இது ...?

என்ன உலகமடா இது ...? 

கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 9:47 pm
மதுக்கடையில் இருந்து ....
உளறுகிறேன் குடிகாரன் 
என்கிறார்கள் ....!
மாதுவை நினைத்து .....
உளறுகிறேன் கவிதை 
என்கிறார்கள் ....!
எல்லாம் அவள் தந்த ....
வலியால் வந்த விளைவே ...!

நீ கனவில் வரவேண்டும் ...?

நீ கனவில் வரவேண்டும் ...?

கவிப்புயல் இனியவன் on Thu Apr 04, 2013 5:00 am
நீ கனவில் வரவேண்டும் என்பதற்காக ...
என் உறுப்புக்கள் படும் பாட்டைப்பார் ...?

இதயம் வெளியில் நின்று பிச்சைஎடுக்குறது ...

கண் காவலாளியாக உன்னைத்தவிர யாரையும் ..
என் கனவில் வராமல் வழி மறிக்கிறது ....

மூளை கனவை பதிவதற்காக ...
களஞ்சிய காப்பாளனாக தொழில் படுகிறது ...!
நான் கண்ட கனவை உன்னோடு பகிர்வதற்கு ....!

நீயும் விட்டு போனாய் ...

நீயும் விட்டு போனாய் ....!

கவிப்புயல் இனியவன் on Fri Apr 05, 2013 6:10 am
தனிமையை விரும்பினேன் ....
தனிமை என்னை விரட்டியது ...
தனிமை வேண்டாம் உனக்கென்று ....
காதலித்தேன் உன்னை .....
தனிமை என்னை விட்டுப்போனது ...
நீயும் விட்டு போனாய் ....
பிரிவு வந்தது ...
தனிமையில் இருந்திருந்தால் ...
பிரிவு என்ற காலன் 
வந்திருக்க மாட்டானே ..?