இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 ஜூன், 2017

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?
-----------------------

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!

-------

அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!

இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!

-------

எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!

நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!

^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக