இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 1 ஏப்ரல், 2017

தாய் தந்தை கவிதைகள்

பேசமுடியாத வயதில்.....
அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!

பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்

காதலை காதலித்தது தான் ....!

காதலில்
காயம் வந்தாலும்
காயத்தின் வலி காலத்தால்
மறையாமல் இருக்க காரணம்
காதலை காதலித்தது தான் ....!

நீ
என்னை வெறுத்து பலமாதங்கள்
ஆகிவிட்டது -என்றாலும்
நாம் முதல் நாளில்
பெற்ற இன்பத்துடன்
வாழ்ந்துகொண்டே இருக்கிறேன் ....!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 195

என்னை காதலிக்கிறாய் .........!

நீ .............
என்னை தவிர ............
என் நண்பர்களுடன் ................
பேசுகிறாய்................
அப்படிஎன்றால் - நீ .....
என்னை காதலிக்கிறாய் .........!

உன்னோடு வாழவேண்டும் .......
என்பதல்ல காதல்...........
உனக்காவவே வாழுவதுதான்...........
காதல்............................!

நீ வாசிப்பதற்காக ..........
கவிதையை பார்க்கிறாய்.......
உன்னை சுவாசிப்பதால் ......
கவிதை வருகிறது.......................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 194

அன்றே இறந்துவிட்டேன்..........!

என்
இதயத்தை பந்தை.....
விளையாடுவதுபோல்......
எறிந்து விளையாடுகிறாய்.....
கவலைபடவில்லை.....
தொலைத்து விடுவாயோ......
என்று பயப்பிடுகிறேன்........!

உயிரே
நீ என்னை கண்டுவிட்டு
காணாததுபோல் சென்றாயே.....
அன்றே இறந்துவிட்டேன்..........!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 193

உயிரையும் கொல்கிறது...... !

மெளனவிரதம் உடலுக்கும்.......
உயிராற்றளுக்கும் நலம்......
உன் மெளன யுத்தம் என் .......
உடலை அழிக்கிறது.............
உயிரையும் கொல்கிறது...... !

உன்னை
மறக்கும் எண்ணம்
எந்த நொடியிலும் இல்லை
உன்னை மறந்தால் அந்த
நொடி  முதல் நான் மனிதன்
இல்லை .........................!

&
கவிப்புயல் இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிதை எண் - 192