இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 ஜூன், 2017

ஆன்மீக கவிதை

ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
---------------------------------------------

இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
குத்தும் உணர்வை தா......!

^^^
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதை
^^^

உன் நினைவோடு......
தூங்குவதை காட்டிலும்.....
முள்பற்றைமேல் தூங்குவது.....
எவ்வளவோ மேல்.........!

தீயால்
சூடுபட்டிருகிறேன்.....
வேதனை பட்டிருக்கிறேன்........
அத்தனையும் பெரிதல்ல.....
உன் பிரிவால் தினமும்....
கருகிக்கொண்டிருக்கிறேன்.....
தாங்கமுடியா வலியுடனும்.....
மாறா தழும்புடனும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் கவிதை
^^^

காதல் அணுக்கவிதைகள்

உன் ........
பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!

------

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!

------

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

------

இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!

------

பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!

------

காதல் அணுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்


வெள்ளி, 16 ஜூன், 2017

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?
-----------------------

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!

-------

அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!

இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!

-------

எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!

நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!

^^^
கவிப்புயல் இனியவன்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

சிந்தித்து சிரிக்க சென்ரியூ
---------------
நண்பர்கள் கடும் சண்டை
காயம் ஏற்படவில்லை
முகநூல் நட்பு
----------------
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம்
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி
----------------
சுவாமி தரிசனம்
நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர்
ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு
----------------
பொய் சொன்னால்
மெய் மறக்கும்
காதல்
--------------
கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கியது நாய்

^^^
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 13 ஜூன், 2017

கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்

----------------------------------------
சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்
டாக்டர் அறிவுரை
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது

^

நேர அட்டவனனைப்படி
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள்

^

உயிரை கொன்று
அலங்கரிக்கப்படுகிறது
பட்டுப்புடவை

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம்
கட்டணமின்றி தூங்கலாம்
நடைபாதை

^

பகலிரவு ஆட்டம்
இரவு சூதாட்டம்
பகல் கிரிகட் ஆட்டம்