இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 ஆகஸ்ட், 2017

இதயம் ஒரு சுமைதாங்கி.....!

சேர்ந்து .......
வாழும் காதலில்.....
 சுகம் உண்டு.....
பிரிந்து வாழும் காதலிலும்.....
சுகமிருக்கும் ........
பிரிந்து வாழும் காதலில்....
இதயம் ஒரு சுமைதாங்கி.....!

தாங்க முடியாமல் .....
துடிக்கிறது இதயம்.....
உன் இதயத்தையும்.....
வாடகையாய் கொடு....
வலியை சுமக்க கூலி.....
தருகிறேன்.........
இல்லையேல் மரணத்தை....
பரிசாக தருகிறேன்.......!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 

நீ மட்டும் இதயத்தில்.....

காதலில் தோற்ற இதயம்.....
சஹாரா பாலவனம்.....
புரிந்துகொண்டேன்......
உன் காரணமில்லாத.....
பிரிவால் - உன் பிரிவு.....
காயமாக இருந்தாலும்.....
உன் வலிகளில் சுகமும்.....
இருக்கத்தான் செய்கிறது.....
நான் எப்படியோ போகிறேன்....
நீ மட்டும் இதயத்தில்.....
பத்திரமாய் இருக்கிறாய்.....!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

உன் ஞாபங்கள் வலிக்கிறது

உன் .....
காதலுக்கு.....
நன்றி......
நீ சென்றபின்னும்....
என்னோடு வாழ்கிறது......
உன் நினைவுகள்.....
புண் பட்ட இதயத்துக்கு.....
புனித நீராய் சுகம்.....
தருகிறது.........!

&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது

சனி, 5 ஆகஸ்ட், 2017

மொத்த கஸல் கவிதைகள் 1200

என் கவிதைகள்
கோடைகாலத்தில்.....
பொழியும் மழை.....
மெல்ல இதயத்தை.....
நனைக்கிறாய்.....!

அழுகை
பார்ப்பவர்களுக்கு......
துன்பம்....
கண்களுக்கு இன்பம்....
இதயத்துக்கு சுகம்.....!

என் ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் கவிதை....
தயவு செய்து அழுதுவிடாதே....
தாங்க மாட்டேன்.....!

-------------------------
முள்ளில் மலரும் பூக்கள் 70
-------------------------
மொத்த கஸல் கவிதைகள் 1200
கவிப்புயல் இனியவன்

இதயத்தில் மின் அதிர்வு

உன் கண்ணீல் மின்சார சக்தி
என் இதயத்தில் மின் அதிர்வு
ஏன் இப்போ மின் வெட்டு ..?

-------
நீ தரும் வலியை
யாருடன் பரிமாறுவேன்
உன்னிடம் கூட சொல்ல
முடியாமல் தவிக்கிறேன்

------
கவிப்புயல் இனியவன்