இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


யாரேமே நிகர் இல்லை உனக்கு ..!

ஒரு நாள் மழையில் நன்றாக நனைந்து விட்டேன் 
வீட்டுக்குள் புகுந்தபோது ... 

தங்கை : ஏண்டா மழைவிட்ட உடனே வந்திருக்க கூடாதா ..? முட்டாள் ..என்றாள் 

அண்னன் : உன்னான் ஓர் குடை எடுத்து போக முடியாதா ..? அறிவு கெட்டவனே ..? 

அப்பா : ஜாலமோ காச்சலோ வந்து கிட படிப்பு வீனாபோகட்டும் 

அம்மா : ஓடி வந்து தலையை துவாயால் துடைத்து விட்டு -இந்த பாழாப்போன மழை என் குழந்தை வீட்டுக்கு வந்தவுடன் பெய்திருக்க கூடாதா ..?


உனக்காக காத்திருந்து ... 
காத்திருந்து கலைத்து விட்டேன் .. 
நம்பிக்கையை இழக்க மாட்டேன் ... 
நிச்சயம் அடிக்கடி வருவாய் ... 
என் நினைவிலும் கனவிலும் ... 
நினைவில் வரும் போது உன்னை ரசிப்பேன் .. 
கனவில் வரும் போது உன்னோடு பேசுவேன் ...



நீ தந்த வலியால்... 
என் உடல் முழுவதும் ... 
மறுத்து(விறைத்து) விட்டது ... 
இதயம் கொஞ்சம் ஈரமாக .. 
உள்ளது நீ என்னை .. 
புரிந்து கொள்வாய் என்று ...?



மெளனத்தை கலைத்து 
வெகு தூரம் சென்று 
திரும்பிப் பார்க்கிறேன்... 
உன் நினைவு நெருப்பாகி சுட்டெரிக்க 
நீ எங்கே? என் காதலனே..



எனக்கு தெரியும் உன்னை .. 
காதலிப்பது -இலந்தை முள்மேல் .. 
விழுவதற்கு சமனென்று ... 
இருந்தும் உன்னை காதலிக்கிறேன் ... 
காதலில் ஒரு சவால் இருக்கவேண்டும் ... 
உன்னோடு வாழும் நாளில் ... 
நான் எந்தசவாலையும் ஏற்கும் .. 
பக்குவத்தை பெற்றுவிடுவேன் ...! 
காதல் ஒரு ஆசானும் கூட