இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 மே, 2014

உதட்டளவில் வார்த்தைகள் ...!

உதட்டளவில் வார்த்தைகள் ...!
----------------------------------------------

உதட்டளவில்
வார்த்தைகள் ...!
நானிருக்கும் வரை நீ
ஜோசிக்காதே..- நான்
இருப்பதே உனக்காத்தான் ...
மயங்கினேன் வார்த்தைக்கு
தவிக்கிறேன் அன்புக்கு ....!!!

ஆசை வார்த்தைகளை
கூறிக்கூறி அன்புக்கு அடிமை
படுத்திய உள்ளங்களே ...!!!
மிகப்பெரிய பாவம் ஆசை
வார்த்தையால் ஒருவரை
வசப்படுத்துவதே ....!!!

பாழாய் போன என் மனதுக்கு
பாவி பொய் சொல்கிறான் என்று
தெரிந்தும் அன்புக்கு எங்கும்
என் உள்ளத்துக்கு பொய் என்ன
மெய் என்ன எல்லாம் ஒன்றுதான்
என்று நினைக்குது என் மனம் ...!!!

அணுக்கவிதை

நான் தற்கொலை செய்ய
மாட்டேன் - நீதான் என்னை
தினமும் கொல்கிறாயே...!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

இதய வலி கவிதை

நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

அணுக்கவிதை

உன்
சின்ன சிரிப்பு போதும்
என் நெஞ்சில் இருக்கும்
வலியை உடைத்தெறிய ....!!!
*
*
கே இனியவன்
அணுக்கவிதை

வலிக்குதடி

உயிர்
போகும் வலியடி ...
உன்னை காணாத
வரைக்கும் - உயிர்
வரும் இன்பமடி
உன்னை கண்டவுடன் ....
உன் கண் தான் என்
காதலுக்கு காரணம்
அதே கண் என்னை
பார்க்காமல்
திரும்புகிறது -
வலிக்குதடி- நீ -திரும்பும்
போதெல்லாம் ...!!!
+
+
கே இனியவன்
காதல் வலி கவிதை