இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 17 அக்டோபர், 2016

தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல்

தொலைபேசிக்கும் கைபேசிக்கும் மோதல்
----------------------

தொலை பேசிக்கும் ....
கை தொலைபேசிக்கும் ....
வாக்குவாதம் ........!!!

தொலை பேசி ......
கைபேசியை பார்த்து ......
திட்ட தொடங்கியது .....!!!

பண்பாடு அற்றவளே.....
ஊர் ஊராய் சுற்றி திரிகிறாய் ......
எந்த நேரமும் மற்றவர்களின் .....
கையை பிடித்துக்கொண்டு ......
காதிலையும் வாயிலையும் ....
முத்தங்கொடுத்து கொண்டு ....
அலைகிறாயே ......!!!

கொதித்தெழுந்தது ........
கைபேசி ..............................
அதுதான் நீ வீட்டிலேயே ......
இருந்துகொண்டு ......
உடம்பு ஊதிக்கொண்டே .......
போகிறாய் - என்னை .....
பார்த்தாயா எவ்வளவு .....
சிம்மா ஒல்லியா சின்னனாய் ......
இருக்கிறேன் ..........!!!

உனக்கு வயத்தில் மூத்தவள் .......
சொல்கிறேன் எனக்கு ......
வாய் காட்டிடாதே ................
உன்னால் எல்லோரும் .....
துன்பப்பட்டுக்கொண்டே .......
இருக்கிறார்கள் ..............!!!

மாணவர்களின் கல்வி பாழ்......
காதலனின் பணப்பை பாழ் ......
உழைப்பாளியின் ஊதியம் பாழ் ......
தொடர்ந்து பட்டியல் இட்டது .....
தொலைபேசி ......................!!!

அக்கா என் கொக்கா ........
யாரும் யாரை கொடுப்பதில்லை ......
அவர் அவர் தான் கெடுக்கிறார்கள் ......
அளவோடு பயன்படுத்தினால் ....
எல்லாம் அமிர்தமே .......
அளவுக்கு மிஞ்சினால் ......
அமிர்தமும் நெஞ்சே .................!!!

%
நகைச்சுவைக்காக ஒரு கவிதை


கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

ஒருதுளி நீ ....!!!

பெற்ற .....
தாயின் இழப்பு ...
ஒருபுறம் கண்ணீரை ....
கொண்டு வருகிறது ...!!!

நீ பிரிந்து சென்ற ..
வலி கண்ணீரை ..
தருகிறது ...!!!
இரண்டையும் இரு ..
கண்களாக விரும்பினேன் ..
என்பதற்காக ...
என் இரண்டு கண்ணும் ..
அழுகிறது ..!!!

நிச்சயம் சொல்வேன் ...
வரும் துளிகளில் ...
ஒருதுளி நீ ....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

தேடுவேன் உயிர் உள்ள வரை,....!!!

நீ
உண்மையோ ....
பொய்யோ....
பேசினாலும் .....
ரசிப்பேன் ......!!!

எத்தனை ...
முறை அடித்தாலும்...
தாய்மடித் தேடும் ...
பிள்ளையாய்...
உன்னை மட்டுமே ...
தேடுவேன்...
உயிர் உள்ள வரை,....!!!

நீ
பார்வையில் இருந்து
விலகி செல்லும் ....
போதெல்லாம் ....
கண்களுடன் .......
போராடுகின்றது,..
கண்ணீர் .....!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

உன்நினைவு இல்லாத

உன்.... 
நினைவு இல்லாத ....
தேசம் எது சொல் ......
அங்கே சென்று ....
விடுகிறேன்..............!!!

உன் ....
நினைவுகளின் ...
வலியை .......
என் இதயத்தால்
சுமந்து கொண்டு ....
உன் முன்னே .....
வாழ முடியவில்லை .....!!!

வாழ முடியவில்லை .....!!!

கலைந்தே ....
போனாலும்.....
மறப்பதில்லை...
நீ வந்துபோன....
கனவுகள். . !

நீ
பிரிந்தே போனாலும்.....
விழியோரம் கலையாமல்....
நீ தந்த நினைவின் ....
வலிகள் ........!!!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்