இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2020

உனக்கு வலி

உனக்கு வலி தலை.... 

எனக்கு வலி இதயம்... 

எப்படி சமனாகும்..... !


அருகில் இருந்து.... 

உன்னை பார்ப்பதை... 

காட்டிலும்  தூர இருந்து.... 

உன்னை நினைக்க.... 

அழகாய் இருக்கிறாய்.... !


வாழ்க்கை

ஒரு கடிகாரம்....

இரண்டு முள்ளும்... 

தேவை...... !!!


@

கவிப்புயல் இனியவன் 

கஸல் கவிதை 

24.10.2020


நான் பருந்து

நான் பருந்து.... 

காதல் கூட்டை.... 

மரத்தில் கட்டமாட்டேன்...

மலையில்தான் காட்டுவேன்.... !!!


ஓயாமல் பேசாதே.... 

என்றேன் கேட்டாயா....

ஓய்ந்து போனதே.... 

நம் காதல்..... !!!

 

வாழ்க்கை ஒரு.... 

வட்டம் என்றாய்.... 

தவறு...... 

வாழ்க்கை... 

ஒரு முக்கோணம்... !!!


@

கவிப்புயல் இனியவன் 

24.10.2020

04.05 pm


வெள்ளி, 2 அக்டோபர், 2020

காந்தக் கண்

காந்தத்திற்கு.... 

இரும்பு தேவை... 

இதயத்தை ஏன்..... 

ஈர்தாய்.....? 


கண்ணில் 

காந்தத்தையும் 

இதயத்தில் இரும்பையும்... 

வைத்துவிட்டான்... 

இறைவன் உனக்கு.... !!!

@

கவிப்புயல் இனியவன் 


புதன், 17 ஜூலை, 2019

இதயத்தில் நீயும்,,,,

தொண்டையில் சிக்கிய,.,,
மீன் முள் மெல்ல மெல்ல,,,
வலி தருவதுபோல்,,,,.

இதயத்தில் நீயும்,,,,
மெல்ல மெல்ல வலியை,,
தருகிறாய்,......

கொதிக்கும் எண்ணைக்கு,,,,
பயந்து இறால் எரியும்,,,,
அடுப்புக்குள் விழுந்தது போல்,.
அமைந்துவிட்டது வாழ்க்கை,,

@
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 7 ஜூலை, 2019

காதல் உங்களை ......

உடலில் காயத்தோடும் .....
உள்ளத்தில் சோகத்தோடும் ......
வாழ்ந்துகொண்டிருக்கும் ......
காதல் இதயங்களே......
காதல் உங்களை ......
காலத்தால் வாழவைக்கும் .....!
&
கவிப்புயல் இனியவன்
07 07 2019