இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 நவம்பர், 2015

என்னை கருக்கி விட்டாள்

பார்வையில் நெருப்பாய் இருந்தாள்....
பேசுவதில் தீயாய் இருந்தாள் ....
கற்பில் தீ பிழம்பாய் இருந்தாள் ....
அன்பில் அழகான சுடராய் இருந்தாள் ....
காதலால் என்னை கருக்கி விட்டாள்....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 30

அதிகமாக நம்பினேன்

அதிகமாக நம்பினேன் ....
அளவுக்கு மீறி அன்புகொண்டேன் .....
அகிலத்தையே மறந்தேன் ....
ஆதரவற்று நிற்கிறேன் ....
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
ஐந்து வரி கவிதைகள் ......!!!
கவிதை எண் 29

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
------
விடுதலை  போராட்டங்கள் ....
எதுவும் பொழுதுபோக்கு செயளல்ல....
மடிந்தவர்கள்  மண் பொம்மைகளல்ல.....
போராடிய காலம் எந்தளவோ....
விடுதலைக்காக காத்திருக்கும் காலமும் ....!!!

எப்போது ஒரு இனம் அழிகிறது ...?
பொருளாதார வளங்கள் அழியும்போது ....
பொருளாதார தடை விதிக்கும் போது ....
பொருளாதாரமே வாழ்கை எனநினைக்கும் போது....
பொருளாதாரத்தை வாழ்க்கையாக நினைக்காதபோது ....
யாவற்றுக்கும் மேலாக ஒரேஒரு காரணம் ....
இனத்தின் அடையாளங்களை அடமானம் ....
வைக்கும்போதும்  இனம் வரலாற்றை மறக்கும் போதும் ....!!!

தந்து விட்டுப்போன சுதந்திரத்தை ....
தட்டிகழிக்காமல் புத்திகொண்டு போராடுவோம் ....
பக்திகொண்டு போராடுவோம் .....
உணவோடு உணர்வையும் ஊட்டி வளர்ப்போம் ....
எமகென்னெ யாரும் போராடட்டும் என்ற ....
எண்ணத்தை எண்ணை ஊற்றி எரிதுடுவோம் ......!!!




மறதியை மறந்திடலாம்

உன்னோடு 
வாழ ஆசைப்பட்டேன் ....
உன்னோடுடனா...?
வாழப்போகிறேன் ....
என்றாகிவிட்டாயே ...!!!

உன்னை காதலித்தேன் ....
காதலோடு இருக்கிறேன் ....
காதலியை காணவில்லை ....!!!

மறதியை மறந்திடலாம் ....
மறந்துகூட உன்னை ....
மறக்க முடியவில்லை ....!!! 

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 906

ஏமாறமாட்டேன்

ஏமாறமாட்டேன் ....
எப்படி ஏமாற்றுவது ...
என்பதை உன்னிடம் ....
கற்றுகொண்டேன் ....
இனியாரும் என்னை ....
ஏமாற்ற முடியாது ....!!!

காதலிக்க மாட்டேன்....
யாரையும் காதலிக்க மாட்டேன் ....
இதயமில்லாத உன்னைப்போல் ...
யாரையும் காதலிக்க மாட்டேன் ...!!!

+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை