இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 9 ஜூலை, 2017

இறந்தும் துடிக்கும் இதயம் 13

என் கவிதைகள்
கண்ணீரை மையாக்கி ....
கண்ணால் பேசியவை .....
வரிகளாய்  வலிகளாய் .....
பிறக்கின்றன ....!

என்னவளே ...
நீ மொட்டாகவே....
இருந்திருக்கலாம்,,,,,
மலராக வந்து......
வாடிவிட்டாய் .......!

பார்வையால்.....
நக்கீரன் சாம்பலானார்.....
உன் பார்வையால்........
பாடையில் போய்விட்டேன்....!

+
&
கவிப்புயல் இனியவன்
இறந்தும் துடிக்கும் இதயம்
மற்றுமொரு காதல் கஸல் 13
மெல்லிய காதல்வலி கவிதை

சனி, 1 ஜூலை, 2017

நான் இறந்து விட்டேன்....!

நீ என்னை மறந்துவிடு...... என்று சொன்னபோதே..... நான் இறந்து விட்டேன்....! உன்னை பிரிந்த பின் என் இறந்த உடலை .... நானே பார்கிறேன் ....! என் இறந்த உடலுக்கு அருகில் நீயும் நிற்பதை நான் பார்க்கிறேன் .....! இறந்தபின் என் ... உடலை பார்ப்பதும் .... நீ அருகில் இருப்பதையும் .... உயிரோடுபார்க்கும் ........ முதல் மனிதன் .... நான் தான் .....! ^ வலிக்கும் இதயத்தின் கவிதை கவிப்புயல் இனியவன்

நீ தந்த காதல் பிரிவு

நீ
தந்த காதல் பிரிவுக்கு....
மிக்க நன்றி.....
நீ
இல்லாத போதும்.....
உன்னையே நினைக்கும்....
அளவுக்கு நினைவுகளை....
தந்துவிட்டு சென்றதற்கு........!

இதயத்தில் காயமில்லை.....
என்றாலும் வலிக்குதே.....
எங்கே கற்றுக்கொண்டாய்....
காயம் தராமல் வலியைதரும்....
வித்தையை.....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன் 

கண்ணீர் விட முனைகிறது .....!!!

மனதை கவரும்
காதலியாக பார்த்தேன்
முடியவில்லை ....!

இதயத்தின் வலியை....
கவிதையாக வடிக்கிறேன்....
கவிதையை நேசிக்கும்....
காதலியாக இருந்துவிடு.....
உயிரே ....!

உன்னை நினைத்து கவிதை....
எழுதும் போதுதானடி.....
எழுத்து கருவி கூட .....
கண்ணீர் விட முனைகிறது .....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

வியாழன், 22 ஜூன், 2017

காதல் அணுக்கவிதைகள் - 02

உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!

------

உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!

------

கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!

------

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!

-----

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!

-----

காதல் அணுக்கவிதைகள் - 02
கவிப்புயல் இனியவன்