இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஜூலை, 2014

பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?



பார்வையால் ஓராயிரம் இன்பமா ..?

உன்னை பார்க்கும் 
போது என்னை பார்க்காதது 
போல் ஏனடி கபடமாடுகிறாய்...?

நீ கள்ளமாய் என்னை கடைக்கண் 
பார்வையால் என்னை பார்த்தது ....?

இன்ப சுகத்தில் இன்பமடி 
இதற்கு நிகராய் இந்த உலகில் 
இல்லையடி இன்பம் ......
உன் ஓரக்கண் பார்வையால் 
ஓராயிரம் இன்பமா ..?


குறள் - 1092

குறிப்பு அறிதல்

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் 
செம்பாகம் அன்று பெரிது.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 12

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11



என் ஆதியும் அந்தமும் ....!!!

என்னவளின் பார்வை
நோயும் மருந்தும் 
அவள் கருமை கொண்ட கரு 
விழிப்பார்வை என் உயிரையே 
கொல்லும் பார்வை ...!!!

மறுமுறை பார்வை 
உயிர்த்தெழும் உயிராய் 
உயிர்தெழ வைக்கிறாள் ..
உன் பார்வைதான் 
என் ஆதியும் அந்தமும் ....!!!


குறள் - 1091

குறிப்பு அறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு 
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 11

என்னை கொன்று சென்றுவிட்டாய்…!!!

என் மூச்சு காற்றே நீ
எனகென ஓர் உயிர் நீ
எனக்கென ஓர் துடிப்பு நீ
எனக்கென ஒருத்தி
நீதான் என்று இருந்தேன்…!!!
நீயோ .......?
உனக்கென ஒரு வாழ்க்கையை
உனக்கென ஒரு உறவை
உள்ளதை உறுதிப்படுத்தி
சென்று விட்டாய் .....!!!
என்னையும் என் காதலையும்
உதறிவிட்டு சென்றுவிட்டாய்…
இல்லையடி என்னை
கொன்று சென்றுவிட்டாய்…!!!

காதல் - சொல்லதிகாரம்

காதல் - சொல்லதிகாரம் 
--------------------------------

" மச்சி உன்னைத்தாண்டா பாக்கிறாள் "
காதலில் அதிகம் நண்பர்கள் சொல்லும் வார்த்தை 

" தூரப்போய் என்னை பார்ப்பாள் "
காதலன் அதிகமுறை நண்பர்களுக்கு சொல்லும் வார்த்தை 

" என்னமோ செய்யுதடா அவளை பார்த்தபின் "
காதலன் அதிகமுறை நண்பனுக்கு சொல்லும் வார்த்தை 

"உன்னை தவிர எனக்கு யாரையும் பிடிக்குதில்லை "
காதலில் இருவரும் மாறி மாறி அதிகம் சொல்லும் வார்த்தை 

"கவிதை என்றாலே நீதாண்டி என் வரிகள் "
காதலித்துக்கொண்டு கவிதை எழுதுபவர் அதிகம் சொல்லும் வார்த்தை 

"நீ தனியே செல்லவில்லை என்னையும் சுமந்து செல்கிறாய் "
விடுமுறையில் காதலர் பிரியும் போது அதிகம் சொல்லும் வார்த்தை 

"உனக்கு பிடித்தவைதான் எனக்கும் இப்போது பிடிக்கிறது "
நினைவு பரிசு வாங்கும் போது காதலர் அதிகம் சொல்லும் வார்த்தை 

"நீ என்னை பிரிந்தால் உனக்கு முன் நான் இறப்பேன் "
காதலில் பிரிவு வரும் என்று தெரிந்தவுடன் காதலர் அதிகம் சொல்லும் வார்த்தை 

"என்னடா செய்வது உன்னை விரும்பினால் அப்பா தற்கொலை செய்வாராம் "
காதலில் இருந்து காதலி பிரிய அதிகம் சொல்லும் வார்த்தை 

" எங்கிருந்தாலும் வாழ்க "
பிரிந்த காதலன் காதலிக்கு அதிகம் சொல்லும் வார்த்தை

புதன், 23 ஜூலை, 2014

உன் நினைவுதான் என் உருவம் ...!!!

உன்
சேலை மடிப்பில்
ஒவ்வொரு மடிப்பிலும்
என்னை நீ மடித்து
செருகியுள்ளாய் அதனால்
நீ இத்தனை அழகாய்
திமிருடன் இருக்கிறாய் ....!!!

என்னிடம்
இருந்து நினைவுகளை
காதலை பெற்று அழகாய்
இருப்பவளே - உன்னை தவிர
என்னிடம் எதுவும் இல்லை
உயிரே -உன் நினைவுதான்
என் உருவம் ...!!!