இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 நவம்பர், 2015

ஆட்டிப்படைகிறது காதல்

நீயும் நானும் நிம்மதியாய் ....
இருக்க ஒரே ஒரு வழி ....
நீ என்னை காதலிப்பதே ....!!!

நீ 
எதற்காக தூண்டில் ...
போட்டாய் - நான் 
எதற்காக துடிக்கிறேன் ...?
ஆட்டிப்படைகிறது காதல் ....!!!

உனக்கு என் கவிதை ....
பொழுதுபோக்கு - எனக்கு ....
வாழ்கை பொழுது....!!!

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 902

இதயம் சுடுகிறது

நான் சில காலம் 
முள் மெத்தையில்.....
தூங்கபோகிறேன் .... 
காதலிக்கபோகிறேன்....!!!

ஒவ்வொரு நொடியும் ...
மூச்சு விடும் போது ....
இதயம் சுடுகிறது ....
உள்ளிருப்பது -நீ ,,,,!!!

வாழ்வதற்காக காதலா ..?
சாவதற்காக காதலா ...?
நீ எதை தந்தாலும் ....
காதலோடு ஏற்பேன் ....!!! 

+
கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் 
தொடர் பதிவு கஸல் - 901

வியாழன், 19 நவம்பர், 2015

விரும்பி கொண்டே இருக்கிறேன்.....!!!

என்னவளே ....
நீ இந்த உலகத்தில் .....
விரும்பாத ஒன்றை...
நான் இன்னும் விரும்பி ....
கொண்டே இருக்கிறேன்.....!!!

ஆண்டுகள் கடந்தும் ....
என்னில் உனக்கு காதல் ....
வரவில்லை - நானோ ....
உன்னை காதல் செய்கிறேன்....!!!

மரணத்தின் தூரத்தை தூரமாக்கியது

இறைவா
என் இதயத்துக்கு.....
இரண்டு சிறகுகள் தா....
நீண்ட தூரம் சென்று -அவள்....
நினைவுகளோடு உல்லாசமாக ....
அலைவதற்கு ..!

மரணத்தின் தூரத்தை ....
தூரமாக்கியது என்னவளின் ....
அருவியாய் வந்த காதல் ....
நரகமாக இருந்த வாழ்கையை ....
சொர்க்கமாக்கியவள் .....!!!

அவளின்றி நான் இருக்கமாட்டேன்

கண்டேன் 
என் தேவதையை கண்டேன் ....
கண் குளிர கண்டேன் என்னவளே ....!!!

அவளருகில் .....
ஆயிரம் பட்டாம் ....
பூச்சிகள் பறப்பதுபோல் ....
ஆயிரம் ஆயிரம் பெண்கள் ...
அத்தனைக்கும் மத்தியில் ....
தேவதையை கண்டேன் ....!!!

அவளுக்கு 
நான் யாரென்று தெரியாது..... 
அவளின்றி நான் இருக்கமாட்டேன் ....... 
அவளுக்கு தெரியாது ....!!!

+
கவிதையால் காதல் செய்கிறேன் 21
கவிப்புயல் இனியவன்