இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 மார்ச், 2017

ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03

உச்சிவெயில் சுட்டெரிக்கும்......
குதிப்பாதம் வெந்து துடிக்கும்.......
வேண்டுமென்றே மெல்லனடந்து.....
இரண்டு மணிக்கே வீடுசெல்வோம்.....
அவன் வீட்டில் எனக்கும்.....
என்வீட்டில் அவனுக்கும்..........
திட்டியே கொட்டிதீர்த்துடுவர்.........!

தும்பியை பிடித்து வாலில்......
நூல்  பட்டமாய் பறக்கவிட்டு......
புல்வெளியில்பட்டாம்பூச்சியை......
வேர்வைசிந்த கலைத்துபிடித்து.....
ஒற்றை சிறகு ஒடிந்த பூச்சியை......
மெல்ல தடவி கண்ணீர் விட்டு.......
வரும் வழியில்மாமரத்துக்கு.....
கல்லெறிய வீட்டின் ஓட்டில் பட......
ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு வந்த நாள்......
வாழ்ந்த நாளில் வசந்த காலம்.........!

&
ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு 03
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக