இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 3 மார்ச், 2017

வாழ்க்கை இனிப்பதில்லை......... !!!

காதல் வேண்டி
தூவல் தூக்கினேன்
--------------------------------

தூவலால் நீர்துளி தன்மீது......
தெறிக்குமா என்றேங்கும்.......
பூச்செடிபோல் - ஏங்குகிறேன்.....
என்னவளே உன் காதல் .......
தூறல் என் மீது தெறிக்கவே.......!!!

வேண்டுதல் இல்லாமல் .........
வெற்றிகள் கிடைப்பதில்லை......
தேடுதல் இருந்தால்........
முயற்சிகள் தோற்பதில்லை
காதல் தூறல்  இல்லாமல் .......
வாழ்க்கை இனிப்பதில்லை......... !!!

நீ காதல் மட்டும் செய்......
உன் காதல் செடியையும்......
தூவல் கொண்டு நானே......
வளர்த்து விடுகிறேன்.........
கனவுகள் கற்பனைகள்....
நினைவுகள் ஏக்கங்கள்....
என் காதல் தூவலுக்குள்.....
நிரம்பி வழிகிறது............!!!

பனிதுளி பட்ட புல் நுனிபோல்....
காதல் தூவத்தால் உன்னை.....
குளிரவைக்கிறேன் - என்னவளே....
காதல் தா.........!!!

^^^
கவிப்புயல் இனியவன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக