இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 மார்ச், 2017

பள்ளி வயதில் பள்ளியால்

நினைவிருக்காடா நண்பா ...?
------------------------------------------
பள்ளி வயதில் பள்ளியால்
பார்த்தோமே தோப்பு இடம்
இதுதான் ...!!!
இப்போ ஒருமரமும் இல்லை
ஒருமரம் மட்டும் தனியாக
படப்போகும் நிலையில்
இருக்கடா ....!!!

நினைவிருக்காடா நண்பா ...?

நீ
முதல் காதலித்த தேவதை.....
வீடு இதுதானடா ...
வீடிருக்கிறது -அவள்
வெளிநாட்டில் ....!!!

நினைவிருக்காடா நண்பா ...?

மழைகாலத்தில் குதித்த
கிணறு -கிணறு இருக்கு
தண்ணியில்லை .....!!!
எல்லாமே மாறிப்போச்சு
நம் நட்பு மட்டும் மாறவில்லை
ஏன் தெரியுமா ...?

அதைசொல்லி நட்பை
நட்பை எல்லைக்குள் கொண்டு
வர விரும்பவில்லை நண்பா ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக