இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 28 செப்டம்பர், 2017

கவிப்புயலின் புதிய கவிதைகள் 04

வெற்றியின் ரகசியம்

வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...

தோல்வி மனசுல தங்க கூடாது...

இதுதான் வெற்றியின் ரகசியம்.....

-------------
நீ யாரை பார்த்தவுடன் உன்னை மறக்கிறாயோ .
நீ யாரை பார்த்தவுடன் கண்கலங்குகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கதைக்க ஆசைப்படுகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் மீண்டும் வரணும் என்று நினைக்கிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கும்பிடவேண்டும்போல் இருக்கிறதோ
நீ யாரை பார்த்தவுடன் உன் பிரச்சனை தீரும் நினைக்கிறாயோ ...
அவரே உன் ஆன்மீக குரு காவி உடைகளை நம்பாதே

-----------
இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை

எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே

இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்

வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
-------------

காதல் வாழ்க்கை ...


காதல் வாழ்க்கை ...
தினம் தினம் அழுகிறேன்
என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறுகளை நினைத்து
நான் அழுவேனா
இல்லை..
என் தாய் தந்தை  நினைத்து
நான் சிரிபென ..
அவஸ்தை எல்லாம்
என்னோடு தானே .........

காதலில் விழுந்தேன்
கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...

என் காதல்
கல்லறைக்குள் போனதால் ....

------------
காதலி மீது
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.
காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!

தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது

காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை
பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்

ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!
------------------

நற்செயலைச் சாதாரணமாக நினைத்து
'என்னால் அப்படி இருக்க முடியாது '
என்று சொல்லாதீர்கள்.

சீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்
குவளையில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.
-----------

மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!

அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!

( மதங்கள் என்ன சொல்லுது ....)

ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை
எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை

அன்பே கடவுள்
(அகிலம் பரப்பு மதங்கள் என்ன சொல்லுது ....)

கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்

கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்

அன்பே கடவுள்
அகிலம் பரப்பு

( மதங்கள் என்ன சொல்லுது ...)
------------

நட்பு என்றாலும் ...
காதல் என்றாலும் ....
இதயத்தில் வைக்க ....
இரண்டு கல் வெட்டுக்கள்....
பழகும் வரை உறுதியாயிரு ...
பழகிய பின் உயிராய் இரு ...!!!

நட்பிலும் காதலிலும் ....
இதயத்தில் வைக்க கூடாதவை ....
சந்தேக படாதே ....
சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!


------------
உன் நினைவுகளை....
எனக்குள் விதைத்த.....
காதல் விவசாயி நான் ....
நினைவுகளாலும் கனவுகளாலும்
காதல் கதிரானேன் .....!!!

காதல் அறுவடை ஏன்....?
செய்தாய் உயிரே ....
என் இதயத்தை தரிசு ....
நிலமாக்கிவிட்டாயே....!!!
------------

வட்டியோடு முதலுமாய்
வாரிக்கொண்டு போய்விட்டாயே
குட்டிபோட்ட பூனைபோல்
கூட வருகிறேன்
நானும்…
------------
புன்னகை முகத்தோடு
பூத்துகுலுங்கும் மலரோடு
கைதேர்ந்த நடிகனாய்
கையில் பரிசோடு
காதலியின் திருமணத்தில் நான்.

என்னை விட சிறந்த நடிகன் யார் ?
இதயம் இரத்தத்தை ஓடவைகிறது ....!
முட்டாள்கள் என் இதயத்தில்
கண்ணீர் ஓடுவதை
கணாமல் கதைகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக