இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - ஈ

ஈர விழிகளை திறந்து ....
ஈசன் நினைவில் இருக்கும்
ஈரமான இனிய உள்ளங்களே ...
ஈரேழுலக இன்பம் பெற ...
ஈசன் அடிபணிந்து வாழ்த்துகிறேன் ....!!!

ஈகை கொண்ட இதயம் ...
ஈசன் குடியிருக்கும் இதயம் ....
ஈகையுடன் வாழ்பவர்கள் ....
ஈரேழு தலைமுறை வாழ்வர் ....
ஈகை தலைமுறை காக்கும் ....!!!

ஈட்டி முனைபோல் பேசாதே ....
ஈவிரக்கமின்றி துன்பம் செய்யாதே ....
ஈகையை விளம்பரமாக்காதே ...
ஈன செயல் எதையும் செய்யாதே ....
ஈன்ற தாய்க்கு இழுக்கி வைக்காதே ...!!!

ஈரமான பார்வையே இரக்கபார்வை....
ஈரமான செயலே உயர் சேவை ....
ஈரமான ஈரமான என்றால்....?
ஈசனை இதயத்தில் நினைத்து ....
ஈசனைபோல் வாழும் வாழ்கை ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக