இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 4 மார்ச், 2015

நடித்தது போதும் மனசே ...!!!

நடித்தது போதும் மனசே ...!!!
-----------------------------------

ஓ நெஞ்சே ....
என்னவனுடன்  கூடியபோது ...
என்னுடன் சேர்ந்து நீயும் ...
கூடினாய் இன்புற்றாய்....!!!

எதற்காக ...?
இப்போ நடிக்கிறாய் ...?
என்னவன் கெட்டவன் என்று ...?
நடித்தது போதும் மனசே ...
என்னவனோடு இணைந்துவிடு ...!!!

குறள் 1246
+
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 166

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக