இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 நவம்பர், 2013

விடியும் போது ஏக்கம்

விடியும் போது ஏக்கம்
அழும் குழந்தைக்கு பால்
கிடைக்குமா ..? என்று ..!!!

மதியம் ஆகும் போது
ஏக்கம் விறக்குக்கு
வேலை வருமா ..?
பானை அடுப்பில் ஏறுமா..?

மாலையாகும் போது
ஏக்கம் படிக்கும்
குழந்தைக்கு -விளக்கு
எரியுமா என்று ...?

இரவாகும் போது
ஏக்கம் வெறும்
வயிற்றுடன் உறங்கி
விடுவோமா என்று ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக