இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஏப்ரல், 2015

நடுவரின் தீர்ப்பே இறுதி

நன்கு விபரம் தெரிந்த வயது .....
விடிந்தால் மாவட்ட விளையாட்டு ...
பலநாள் பயிற்சி எடுத்த ஓட்டவீரன் ...
பலருடன் போட்டிபோடும் ....
மெய்வல்லுனர் ஓட்டப்போட்டி .....!!!

நாள் முழுவதும் கற்பனையில் ....
முதலிடத்தை பிடித்ததாய் ....
கனவும் வேறு வந்துதுலைத்தது.....
திடீரென திடுக்கிட்டு எழுந்து .....
மீண்டும் நித்திரையின்றி தவிர்ப்பு ....!!!

ஆரம்பமானது ஓட்டப்போட்டி .....
மைதானம் வானை தொடும் வரை ...
கரகோஷம் நான் வெற்றிபெற ...
முகம்தெரியாதவர்கூட கத்தும் ....
என் பெயர் ஓடினேன் ஒடினேன் ....!!!

எல்லை கோட்டை நெருங்கும் ....
ஒருசில நொடியில் யார் முதலிடம் ....
யார்...? இரண்டாம் இடம் ...?
முடிவை தெரிவிக்க தடுமாறும் ....
நடுவரின் பரிதாப நிலை .....!!!

நடைபெற்றது என்ன ஒலிம்பிக்கா ...?
நொடிகணக்கில் நேரத்தை கணிக்க ...
கண் பார்வையும் மனசாட்சியும் ....
தீர்ப்பின் நீதிபதி - அறிவித்தார்கள் ...
நான் இரண்டாம் இடமாம் .....!!!

நானும் பொறுப்பாசிரியரும்....
இயன்றவரை போராடினோம் .....
முதலவாது வந்தமாணவன்.....
முதன்மையானவரின் மகனாம் ....
தவிர்க்கமுடியாமல் நடுவரின் தீர்ப்பு ....!!!

நடுவரின் தீர்ப்பே இறுதியானது ....!
இன்றுவரை முள்ளாய் குற்றிக்கொண்டே ....
இருக்கும் தீர்ப்பு - நடுவர்கள் நடுநிலை ...
தவறினால் வாழ்நாள் முழுதும் ....
போட்டிகள் என்பது கசப்புதான் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக