இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 செப்டம்பர், 2016

அகராதி நீ என் அகராதி

அகராதி நீ என் அகராதி .....
அகரம் முதல் அந்தம் வரை.....
அங்குலமாய் வர்ணிக்கும் அகராதிநீ.....
அழகு தமிழ் வார்த்தைகளை......
அடுக்கடுக்காய் உனக்காக தொகுப்பேன்....!!!

அகோராத்திரமும் உன்னை நினைத்து.....
அல்லோலகல்லோலப்படுகிறேன்......
அணைக்கவும் முடியவில்லை.......
அகலவும் முடியவில்லை ........
அகம் படும் பாட்டை எப்போ அறிவாய்......?
அழகு தேவதையே அகத்தரசியே

&
அகராதி சொற்களில் கவிதை
கவிப்புயல் இனியவன்
மேலும் தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக