இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 செப்டம்பர், 2016

கதைக்கும் கவிதைக்கும் காதல்

அவன் -இனிமை
--------
எப்படியாவது அவளின் பெயரை கண்டறிய துடித்தான் .இனிமை தண்ணி குடிக்க போவதுபோல் எல்லா இடத்திலும் அவளை தேடினான் . அவள் வேண்டுமென்றே கதவு திரைக்குப்பின்னால் நின்றாள் .தேடிப்பார்க்க இனிமை
அவளை காணாமல் சுவாதிடத்துடன் .வரும்போது . வின்னியாவின் அம்மா குரல் ஒலித்தது .......!!!

வின்னியா ...வின்னியா ....எங்கம்மா இருக்கிற .....? வின்னி வின்னி ....என்று
கூப்பிட்டபோது  திரைக்குப்பின்னால் இருந்து வந்தாள் வின்னியா ......

ஓ பெயர் வின்னியாவா ஓகே ஓகே என்று அவள் காதில் மட்டும் கேட்கும் படி சொல்லிவிட்டு தெரு முனைக்கு வந்தான் நண்பர்களுடன் தெருவை அலங்காரம் செய்வதற்கு ......இன்னும் விடிவதற்கு ஒரு சில மணி நேரமே இருந்தது . ஒரு சின்ன தூக்கம் கூட ஒருவரும் தூங்கவில்லை . விடிந்தால்  கல்யாணம் .

தூரத்தில் இருந்து வின்னியா சைகை கொடுத்தாள். தூங்குங்க என்று
பதில் சொல்ல முடியாமல் இனிமை தானும் சைகையால் நீ முதல் தூங்கு
என்பதுபோல் சொன்னான் .

தலையை அசைத்தபடி தூங்க சென்றாள் - வின்னியா

அவள் - வின்னியா
------
தூக்கம் என்பது கண் ......
மூடுவது மட்டுமல்ல .....
மனமும் மூடவேண்டும் .....
இத்தனை நினைவுகளை ....
தந்து விட்டு தூங்க சொல்லும் ....
அவன்தூங்கி விடுவானா .......?

நினைவுகளால் வெந்து .....
துடிக்கிறேன் விடிய இருக்கும் ....
சிலமணி நேரம் கூட .....
ஜென்மமாய் இருக்குதடா .....
விடிந்து உன்னை பார்ப்பது.....
எனக்கு சூரிய உதயம் ......!!!

&
கதைக்கும் கவிதைக்கும் காதல்
கதையும் கவிதையும் 03
கவிப்புயல் இனியவன்

இன்னும்தொடரும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக