இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 மார்ச், 2014

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 06

அவளும் நானும் காதல் அல்ல காவியம் 06
----------------------------------------------------------------
அவன் அவளை மீண்டும் பார்க்காததால் புழுவாய் துடிக்கிறான் .இனியும் அவனால் அப்படி துடிக்க முடியாது என்பதை உணர்ந்தான் .ஏகலைவன் துரோணரை கற்பனையில் சிலையாய் செய்து தன வித்தையை பழகினான் . இவன் தன் மனதில் அவளை செதுக்குகிறான் ,,,!!!.

அந்த கற்பனை உலகம்
தான் அவனின் " மூன்றாம் உலகம் " அதில் வாழ்பவர்கள் அவனும் அவனின் கற்பனை காதலியும் தான் . இதனுள் யாரும் நுழைய இடமில்லை ...!!!

இனி வரும் கவிதைகளில் "அவன் " என்று வராது
"உன் உயிர் "  என்று வரும் ....!!! " அவள் " என்று வராது
" இதய தேவதை " என்றே தொடரும் .....!!!

----------------------
என் இதய தேவதை ..
என் முன்னாள் நிற்கிறாய்
நீங்கள் இந்த பூவுலகில்
இப்போது அல்ல எப்போதும்
காணமுடியாத அழகு தேவதை
என் இதய தேவதை ....!!!

இதய தேவதையின்
கண்களின் பார்வை
ஆயிரம் சூரிய ஒளி ...!!!
ஒவ்வொரு முறையும்
என்னை பார்க்கும் போதும்
பீன்ஸ் பறவை போல் கருகி
மீண்டும் பறக்கிறேன் .....!!!

என் மூன்றாம் உலக
இறைவா -என்னை
அவளிடம் கொண்டுசெல்ல
பெரும் சக்தியை தா ....!!!
மூன்றாம் உலகமல்லவா
இறைவன்
சக்தியும் கிடைத்தது ...!!!

தொடரும்.....  மூன்றாம் உலக காதல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக