இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 10 மார்ச், 2014

தாயே உன் மடி போதும் .....!!!


தாயே உன் மடி போதும் .....!!!
-----------------------------------------

தாயே....!!!
உன் கடைசி நேர வாழ்க்கையை
வலிகளுடன் மீட்டு பார்க்கிறேன்...!!!

இருகண் பார்வை குறைந்து..
எழுந்து நடக்கும் வலு இழந்து...
கேட்கும் திறன் குறைந்து ...
பேசும் அளவும் குறைந்து ....
வாட்டத்துடன்   தோளும்
இருந்தாலும்........?

நான் அருகில் ...
வந்தபோது என் பெயரை....
மறக்காமல் வினாவாக
கேட்பாய் .....
என் பெயரை வினாவாக
கேட்பதன் மூலம்
ஏங்கி கொண்டிருந்தாய்
என் வரவுக்காய்
என்றுணர்ந்தேன் .....!!!

உன்னருகில் நானிருக்க
பிறவிப்பலன் .....
செய்திருக்க வேண்டும் .....!!!
செய்யவில்லையே -என்
பிறப்பு .....
தொழில் என்றும் குடும்பம்
என்றும் இருசுமைகளை
விரும்பியோ விரும்பாமலோ
சுமந்து கொண்டிருப்பதால்
உன் அருகில் நான் இருக்க
முடியவில்லை .....!!!

உன்னை பார்க்க வரும்
உறவினர் போல் நானும்
அவ்வப்போது வந்து போகும்
நல்ல நடிகனாக நடித்து வந்தேன்
வலிக்குதம்மா நடித்தவைகள்
முள்ளாய் குற்றும் போது......

இன்றுதான் உன்னை நான்
பார்த்த இறுதி நாள் .....!!!

மாலை பொழுது......
பகலாகவே இருந்தாலும்...
தெரியாது கண் உனக்கு....
உன் பேச்சில்லை ...
அசைவு இல்லை ..
யார் என்று கேட்க ..
சக்தியில்லை ....
உன்னருகில் நான் அமர்ந்தேன்
என் கரத்தை பற்றி பிடித்தாய்
உன் கண் ஓரத்தில்
கண்ணீர்துளிகள்  -என்
இதயத்தில் கண்ணீர் துளிகள் ....!!!

தாயே நீ தந்த பாலை
கண்ணீரை சமர்பிக்கிறேன்
நான் தந்த அன்பை நீ
கண்ணீரால் சமர்பித்தாய்....
பிடித்தகையை எடுக்க
முடியவில்லை
எடுத்து கொள்ள உன்னாலும்
முடியவில்லை ...!!!

உன்
தலைமாட்டில் குத்து விளக்கு
என் தலையில் இடி விழுந்தது
தாயே என்றும் சொல்வேன்
படைப்பு தொழிலை செய்பவர் கடவுள்
என்றால் நீயார் ..?
என்னை படைத்தவள் ...!!!
கடவுளுடன் உறவாடி சிரித்து
மகிழ கோயில் வேண்டாம்
தியானம் வேண்டாம் ...
தாயே உன் மடி போதும் .....!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக